>மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு)
தலைமையுரை 2009
மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும், மாலை வணக்கங்களும்.
2007ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட எமது ஒன்றியத்தின் 2வது வருடாந்தக் கூட்டம் இதுவாகும்.
மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் என்ற எமது பாடசாலை மிகுந்த பாரம்பரியம் மிக்கது. இது நாவலர் பெருமானின் நல்லாசியுடன் 1875ம் ஆண்டு நிறுவப்பட்டது. ‘திரு.மா.கணபதிப்பிள்ளையும் குமாரர்களும் தருமமாயுபகரித்த ‘கொள்வiளை’ என்னும் காணிப்பங்கில் எமது கிராமம் கல்வி, அறிவு, ஒழுக்கம்,சமயாசாரம் ஆதியவற்றில் சிறப்புற வேண்டும் என்ற நோக்கத்தோடு’, ‘வியாபாரிமுலை, வண்ணாந்துறை(திருநாவல் நகர்), சாளம்மை ஆகிய முன்று பகுதியனரது ஆதரவோடு ஆரம்பித்து நடத்தப்பட்டது’ என இப்பாடசாலையின் மனேச்சர் ஆன திரு.ஆ.சி.நாகலிங்கம் பிள்ளை 23.5.1954 ல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறுகிறார்.
1884 முதல் திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை பராபரிப்பில் நடாந்து வந்தது. 1892ல் அரச நன்கொடை பெறும் பாடசலை ஆகியது.
1893ல் Nலைப்புலோலி சைவ பாலிகா பாடசாலை ஆரம்பிக்பட்டு 1905ல் அரச நன்கொடை பெறும் பாடசாலை ஆகியது.
1958 அரசாங்கம் பாடசாலைகளை கையேற்றபோது இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே அதிபரின் கீழ் இயங்கி வருகிறது.
சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை, பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் போன்ற தமிழ் அறிஞர்களும், ஞானிகளும் கல்வி கற்ற பெருமைக்குரியது. பிற்காலத்தில் வே.தா.சி;.சிவகுருநாதன், கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன்(திரு.வே.சிவக்கொழுந்து), பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் ந.சண்முகலிங்கம், வை.கா.சிவப்பிரகாசம் போன்ற பெரியார்களையும் வளர்த்தெடுத்தது எமது பாடசாலையே.
ஆயினும் பின்பு அண்மையில் உள்ள பாடசாலைகளின் துரித அபிவிருத்தி காரணமாக இப் பாடசாலையின் வளர்ச்சி சற்றுத் தளர்ந்து கவனக் குவிப்பும் குறைந்திருந்தது. இருந்தபோதும்; அண்மையில் அதிபர் மு.கனகலிங்கம் அதிபராக வந்த பின்னர் பெற்றோர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்று மீண்டும் பாடசாலையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கிறார்.
இத்தருணத்தில்தான் நாமும் கொழும்பில் மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு) ஆரம்பித்து, உங்கள் அனைவரது ஒத்துழைப்புடன் பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவ முன் வந்துள்ளோம். பல பணிகளை ஏற்கனவே செய்து முடித்துள்ளோம்.
ஓன்றியத்தின் உதவியால் ஆற்றப்பட்ட பணிகள்
வருடாவருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு ரூபா 2000 வரையான பணப்பரிசிலும் ‘இளஞானச் சுடர்’ விருதும் எமது நிதி உதவியில் கொடுக்கப்படுகிறது. 2006 ல் 14 மாணவர்களுக்கும், 2007ல் 12 மாணவர்களுக்கும், 2008ல் 6 மாணவர்களுக்கும் அவ்வாறு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இதேபோல வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு உதவுமுகமாக நினைவுப் பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான 11 நினைவுப் பரிசில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக நிரந்தர வைப்புப் பணமாக ஒவ்வொருவரம் 15,000 முதல் 100,000 நிதியை அன்பர்கள் தந்து உதவியுள்ளார்கள். அவற்றின் வட்டிப் பணத்திலேயே வருடாவருடம் பரிசில் வழங்கப்படுகிறது. இது பற்றிய பூரண பட்டியலை பொருளாரின் அறிக்கையில் காணலாம்.
நினைவுப் பரிசில் யாரது நினைவாக வழங்கப்படுகிறதோ அவரது பெயர், புகைப்படம், நினைவுப் பரிசில் நிதியின் அளவு, கொடுத்தவர் பெயர் விபரம் அடங்கிய விபரப் பலகை எமது ஒன்றியத்தால் பிளாஸ்டிக்கில் செய்து வழங்கப்பட்டது.
பாடசாலைக்கான பெரிய இரண்டு கதவுள்ள வாசல் 2007ல் எமது ஒன்றிய அங்கத்தவரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதற்கு மேல் அமைந்துள்ள பாடசாலையின் பெயர் வளவை திரு.க.மோகனதாஸ் 2008ல் அமைத்துக் கொடுத்துளாளர்.
எமது முயற்சி காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் ஊடாக தலா ஒவ்வொரு இலட்சம் நிதி பெறப்பட்டு வகுப்பறைத் தளபாடங்கள் செய்து கொடுக்கப்பட்டன.
பாடசாலையில் நடந்துள்ள ஏனைய பணிகள்
UNCEF உதவியுடன் பிரதான மண்டபத்தை மூடி அடைக்கப்பட்டுள்ளது.
ஊஞ்சல், சறுக்கீஸ் போன்ற விளையாட்டிற்கான வசதிகள் தனி ஒருவரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை சுவர்கள், மதில்கள் யாவும் ஊரார் உதவியுடன் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
லண்டன் பழைய மாணவர்கள் கணனித் தொகுதியை 2006 கொள்வனவு செய்து கொடுத்தனர்
பிரதான மண்டபத்தின் மேடையின் திரைச் சீலைகள், இணைப்பு வேலைகள், ஆகியன முன்னாள் அதிபர்.சிவபாதசுந்தரம் நினைவாக அவரது குடும்பத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.
முன்னாள் ஆசிரியை செல்வி.வேலுப்பிள்ளை பெரிய அலங்கார குத்து விளக்கை அன்பளித்துள்ளார்.
EMACE என்ற நிறுவனம் சிறுவர் நூல்நிலையக் கட்டிடம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இவ்வாறாக பாடசாலை அபிவிருத்தியானது பலராலும் பல மட்டங்களிலும் ஆர்வமாக முன்னெடுக்கப் படுகிறது.
ஆற்ற வேண்டிய பணிகள்
நூலகத்திற்கான தளபாடங்களைப் பெற்றுக் கொடுத்தல். இதற்கு கனடாவில் வதியும் பரம்சோதி குடும்பத்தினருடன் திரு.ராஜ் சுப்பிரமணியம் தொடர்பு கொண்டுள்ளார். விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.
நூலகத்திற்கான நூல்களைப் பெறுவதற்கான முயற்சில் உறுப்பினர்களது ஆதரவை ஏற்கனவே கோரியுள்ளோம்.
மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு சைக்கிள் பார்க் அமைக்க வேண்டியுள்ளது.
மாணவர்கள் பெறும் நீரின் சுத்தத்தை பேணுமுகமாக அவற்றை மூடி அடைக்க வேண்டியுள்ளது.
சிறிய பாடசாலையைச் சுற்றி மதில் அமைக்க வேண்டியுள்ளது.
மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி அவர்களையும் சமுதாயத்திற்கு பிரயோசனமான பிரசைகளாக மாற்றுவதற்காக விசேட வகுப்புகள் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வருடாந்தம் சுமார் 40,000.00 தேவைப்படும் எனத் தெரிகிறது. இதனைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
சிறுநீர் கழிப்பகம் ஓன்றை பெரிய பாடசாலையில் அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க வேண்டியுள்ளது.
இவற்றை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் பழைய மாணவர்கள் போன்றவர்களை அணுகியுள்ளோம். முயற்சி செய்தால் அவை நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
இப் பணிகளின் போது என்னுடன் ஒத்துழைத்த செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முக்கியமாக செயலாளர் திரு சற்குணராசா, பொருளாளர் இரவீந்திரன் ஆகியோர் பேருதவியாக இருந்தனர். திருவாளர்கள் சோமசுந்தரம், ஜீவகுமார், சண்முகசுந்தரம், பிரபாகரன், இரத்தினசிங்கம், வரதராசன், சிதம்பரநாதன், சிவசுந்தரம், இராஜ் சுப்பிரமணியம், திருமதி வள்ளி போன்றவர்கள் தவறாது செயற்குழக் கூட்டங்களுக்கு வந்து தங்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.
திரு.இராஜ் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் மிகமிக முக்கியமானவை. அவர்கள் எமது ஒன்னிறயத்தின் செயற்பாடுகளுக்கும் பாடசாலையின் வளர்ச்சியிலும் காட்டும் அக்கறை அதி விசேடமானவை. ஓன்றியத்தின் தலைவர் என்ற ரீதியல் நான் செயற்படுவதை விட ஆழமாகச் சிந்தித்து, வேகமாக செயற்படுபவர்கள் அவர்களே. உண்மையில் அவர்களில் ஒருவரே இந்த ஒன்றியத்தின் அடுத்த வருடத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்றவேண்டும் என விரும்புகிறேன். அதனை சபை கவனத்தில் கொள்ளும் என நம்புகிறேன்.
பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அறிக்கைகளைச் சமர்பிப்தற்கும், உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வழமையான நடவடிக்கையாக இருக்கிறது.
இதற்கு மேலாக இதனை பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி தமக்கிடையே உறவுகளை புதுப்பித்து, பழைய நினைவுகளை மீள்நினைத்து மகிழவும் கொண்டாவும் வேண்டிய நிகழ்வாகவும் மாற்ற வேண்டிய பணி உள்ளது. வெறும் வருடாந்தப் பணியாக இருக்கும் இதனை ஒன்று கூடலாகவும், தேநீர் அல்லது இராப் போசனத்துடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வாக்கும் பணியில் உங்கள் அனைவரது ஒத்தழைப்பையும் வேண்டுகிறேன்.
நன்றி.
எம்.கே.முருகானந்தன்.
மறுமொழியொன்றை இடுங்கள்