விடுபடாத மர்மம் நீரிழிவு நோயாளிகளை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டே இருக்கிறது.
- ஒவ்வொருவரும் ஒவ்வொன்று நல்லதென்பார்கள்.
- சிலது ஆகாது என்பார்கள்.
- எத்தகைய உணவுகள் அவை என்பதே அந்த விடுபடாத மர்மம் ஆகும்.
ஆயினும் அவற்றைத் தெளிவாக்க புதிய ஆய்வு முடிவுகள் உதவுகின்றன.
இக்கட்டுரை மாப்பொருள் உணவுகள் எந்தளவிற்கு அதிகரிக்கின்றன என்பதையிட்டது.
கணிக்க முடியும்.
சில உணவுகள் குருதியில் சீனியின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். இவை நல்லதல்ல. வேறு சில உணவுகள் படிப்படியாகவே அதிகரிக்கச் செய்யும் அவை நல்லன. இவற்றை விஞ்ஞான ரீதியாக கண்டறியக் கூடிய முறை இருக்கிறதா?
குருதிச் சீனியேற்றக் குறியீடு
ஆம் அதுதான் குருதிச் சீனியேற்றக் குறியீடு (Glycaemic Index).
மாப்பொருள் உணவை உண்ணும்போது அது எந்தளவிற்கு குருதிச் சீனியின் அளவை அதிகரிக்கும் என்பதைக் குறியீடாகக் காட்டுவதே இந்த குருதிச் சீனியேற்றக் குறியீடு என்பதாகும்.
ஒரு குறிப்பிட்ட உணவில் 50கிராம் உணடபின் குருதியில் அதிகரிக்கும் சீனியின் அளவை அதேயளவு குளுக்கோஸ் உண்டபின் அதிகரிப்பதோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே இந்தக் குறியீடாகும். குளுக்கோசுக்குப் பதிலாக அதே அளவு பாண் (Bread) கொடுத்துச் செய்யப்படுவதுண்டு.
பெறப்படும் குறியீடானது 55ற்கு குறைவாக இருந்தால் குறைந்த குருதிச் சீனியேற்றக் குறியீடு என்பார்கள். 56லிருந்து 69 வரை இருந்தால் அது நடுத்தர குருதிச் சீனியேற்றக் குறியீடு ஆகும். 70ற்கு மேலிருந்தால் அது அதிக குருதிச் சீனியேற்றக் குறியீடு எனலாம்.
இவ்வாறு பார்க்கும்போது சோறு, பாண், ரொட்டி, இடியப்பம், அப்பம் போன்ற எமது முக்கிய உணவுகள் யாவும் அதிக குருதிச் சீனியேற்றக் குறியீடு கொண்டவையாகும்.
ஆனால் இது முற்று முழுதாக தெளிவான தரவுகளைக் கொடுப்பதில்லை என இப்பொழுது உணரப்படுகிறது.
குருதிச்சீனிக் கனதி
எவரும் சோறு 50 கிராம், 25 கிராம் வாழைப்பழம் என அளந்து சாப்பிடுவதில்லை.
சோறு என்றால் அதிகம் உண்ண நேரிடும். பழவகைகள் ஓரளவு உண்ணவும், சீனி என்றால் குறைவாகவே உட்கொள்ள நேரும். எனவே சாதாரணமாக ஒரு உணவை எவ்வளவு உண்கிறோமோ அது எவ்வளவு குருதிச் சீனியின் அளவை அதிகரிக்கிறது என்பதை குருதிச்சீனிக் கனதி (glycaemic load) என மற்றொரு வகையில் கணிக்கிறார்கள்.
சாதாரணமாக நாம் ஒரு மாப்பொருள் உணவை எவ்வளவு உண்கிறோமோ அது எவ்வளவு தூரம் சீனியை அதிகரிக்கிறது என்பதை இது காட்டுகிறது.
மேலே உள்ள தரவுகளைப் பார்க்கும்போது கோதுமையை 50கிறாம் மட்டும் உண்ணும்போது குருதிச் சீனியேற்றக் குறியீடு நடுத்தரமாக இருக்கிறது. அதே நேரம் உணவாக உண்ணும்போது குருதிச் சீனிக் கனதி எனக் காணப்படுகிறது.
கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் எதையும் அளவோடு உண்ண வேண்டும். நீரிழிவுக்கு நல்லது எனச் சொல்லப்படுகிற உணவுகளையும் அளவோடு உண்ண வேண்டுமே ஒழிய அதீதமாக உண்ணக் கூடாது என்பதே.
எதை உண்கிறோம் என்பது மட்டுமல்ல எதனோடு சேர்த்து உண்கிறோம் என்பது முக்கியம் என்பதாகும்.
அரிசியை பாற்சோறாக உண்ணும்போது குருதிச் சீனிக் கனதி அதிகமாக இருக்கிறது. ஆனால் சோற்றை பருப்பு. வல்லாரை சம்பல், சொதி முட்டை ஆகியவற்றோடு உண்ணும் போது குருதிச் சினிக் கனதி நடுத்தரமாகக் குறைந்துவிட்டதைத் பட்டியலில் இருந்து கண்டோம்.
சொதிக்குப் பதிலாக மற்றொரு காய்கறியை உணவில் சேர்த்திருந்தால் மேலும் குறைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.
பழங்கள் மிகக் குறைவாகவே குருதிக் சீனி அளவை அதிகரிக்கின்றன.
வாழைப்பழத்தைப் பொறுத்தவரையில் கப்பல், கதலி, சீனி வாழைப்பழம் எனப் பாகுபாடு காட்டித் தேர்ந்தெடுப்பது அவசியமற்றது. எல்லாமே மிகக் குறைவான சீனியேற்றக் குறியீடு கொண்டவையாகும்.
மேற் கூறிய குருதிச் சீனியேற்றக் குறியீடு, குருதிச்சீனிக் கனதி ஆகியவை University of Sri Jayewardenepura tpd; Department of BioChemistry – Faculty of Medical Sciences செய்த ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளாகும்.
Excellent job Dr. Thank you for a wonderfull article. It will be usefull for so many people.
நல்ல தகவல்.
மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
என் கணவரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அவருக்கும் பல தகவல்கள் தெளிவாயிற்று என்றார்.
இன்னும் ஓர் சந்தேகம்: எண்ணையில் பொறித்தவைகள் எந்த அளவுக்கு குருதிச் சீனியை அதிகரிக்கும் என்றும் விளக்க முடியுமா?
சர்க்கரைப் பொருள் சாப்பிட்டால்தான் சர்க்கரை நோய் வரும் என்று படித்தவர்களும் நினைக்கிறார்கள்.
எண்ணையில் பொறித்தவற்றை சாப்பிட்டால் என்ன என்கிறார்கள்.
அதனால் தான் இந்தக் கேள்வி.
முடிந்தபோது எழுதுங்கள்.
நன்றியுடன்,
ரஞ்ஜனி
மிகவும் பயனுள்ள அருமையான கட்டுரை
அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.
payanulla padhivu nandri
நோயாளிகள் மட்டுமல்லாது ஒரு பாதுகாப்புக்காக அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.நன்றி ஐயா.
//இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் எதையும் அளவோடு உண்ண வேண்டும். நீரிழிவுக்கு நல்லது எனச் சொல்லப்படுகிற உணவுகளையும் அளவோடு உண்ண வேண்டுமே ஒழிய அதீதமாக உண்ணக் கூடாது என்பதே.
எதை உண்கிறோம் என்பது மட்டுமல்ல எதனோடு சேர்த்து உண்கிறோம் என்பது முக்கியம் என்பதாகும்//
ஐயா ,இது தான் நான் கற்றுக் கொண்டதும், கடைப்பிடிப்பதும் அதனால் கட்டுக்குள் உள்ளது.
பயனுள்ள விடயங்கள். நன்றி