பட்டிப் பூ
‘உதவாக்கரை.
உதையேன் வளர்க்கிறாய்
உள் வீட்டில்.’
புறுபுறுத் தாங்கவில்லை!
“அப்பாவி போல வெள்ளை நிறம்
அதெல்லாம் வெளிவேசம்.
உள்ளெல்லாம் பெரு நஞ்சு.
குடல் பிரட்டும்
பெரு நாத்தம்
புடுங்யெறி”
பொக்கையால்
எச்சில் பறக்கப்
பொரிகின்றாள்.
கேட்க மனம் பதறுகிறது
இதன் பெருமை தெரியாது அவளுக்கு.
பயனுள்ள சிறு செடி
மறைந்திருந்து உயிர் காவும்
பெருநோயாம் குருதிப் புற்றுக்கு
இதன் சாற்றில் பொடித்தெடுத்த
வின்கிரிஸ்டின் அருமருந்தாம்
வெளிநாட்டார் கண்டறிந்தார்.
நீரிழிவுக்கு சொன்ன மருந்தென
எம்மூர்ப் பரியாரியும்
பகருகிறார்.
குறுஞ்செடியாய் பரந்திருந்து
பால்நிறமும் ஊதாவுமாக
மலர் சொரிந்தது
என் வீட்டு முற்றத்தில்.
சிறுவயதில் அளைந்ததில்
என்னுடலும் உரமாயிற்று
நோய்நெடி அணுகாது.
பீநாறி, சுடுகாட்டு மல்லியென
இழித்தாலும்
நித்திய கல்யாணியென
மங்களமாயும் விழிப்பர்;
மலையாளச் சோதரர்கள்.
என்னளவில் என்றென்றும்
பட்டிப்பூ
அழித்தொழிக்கவொண்ணாது.
பட்டி தொட்டியெங்கும்
பரப்ப வேண்டிய
சிறப்பான மூலிகைதான்.
எம்.கே.முருகானந்தன்
வீரகேசரி ஞாயிறு இதழிலும் எனது ‘மறந்து போகாத சில’ புளக்கிலும் வெளிவந்த கவிதை.
0.0.0.0.0.0.
அருமையான கவிதை!
பலவிடங்களிலும் இந்தப் பூக்களைப் பார்த்திருக்கிறேன். இதில் இதனை மருத்துவப் பலன்கள் இருப்பது இன்று தான் உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.
நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை – கவிதை வடிவில் கொடுத்ததற்கு நன்றி!
ஓ! பட்டிப் பூவில் இவ்வளவு இருக்கா? வெட்ட வெட்ட வளரும். குப்பை மேட்டிலும்…
நன்றி தகவலிற்கு. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
அன்புள்ள டாக்டர் முருகானந்தன்,
வணக்கம்.
உங்கள் வலைப்பதிவுகளை இவ்வளவு நாட்களாக
எப்படித் தவற விட்டேன் என்று தெரியவில்லை.
மிக அருமையான, பயனுள்ள வலைத்தளம்.
பல விஷயங்களை அழகு தமிழில் தெரிந்து கொள்ள
முடிகிறது. மிகவும் அருமையான சமுதாயப்பணியை
மேற்கொண்டிருக்கிறீர்கள்.
இனிதே தொடர வாழ்த்துக்கள்.
-காவிரிமைந்தன்
http://www.wordpress.vimarisanam.com
மிகவும் நன்றி உங்கள் அன்பான கருத்துரைக்கு
இந்தப் பூவை … நாறிப் பூ என்போம். மலையாள நண்பர் சவ நாறிப் பூ என்பார்.
விருதுநகர் பக்கம் ஏக்கர் கணக்கில் பயிரிடுவார்கள் எற்றுமதிக்காக. swiss நாட்டிற்குப் போகிறது என்பார்கள். ஆங்கிலப் பெயர் vinca rosea .மேற்கிலும் அழகிற்காக வளர்க்கிறார்கள். நம் ஊர் செடியைப் போல வீரியமும் இல்லை நாற்றமும் இல்ல.
Brought back memories!
//இதன் சாற்றில் பொடித்தெடுத்த
வின்கிரிஸ்டின் அருமருந்தாம்
வெளிநாட்டார் கண்டறிந்தார்//.
Wiki says that indigenous medical systems knew about the benefits of this plant. I have heard people say that western pharmaceuticals, hired local experts to scout for plants like this.
//Wiki – Direct Quote-This conflict between historical indigenous use, and recent patents on C.roseus-derived drugs by western pharmaceutical companies, without compensation, has led to accusations of biopiracy
//
அருமையான பதிவு.
நன்றி ஐயா.