‘அவரவரை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும்’ என்பார்கள்.
- தகுதி குணம் ஆகியவற்றைக் குறித்துச் சொல்லப்படும் கருத்து அது.
- சாதி அகங்காரம் மிக்கவர்கள் அடிக்கடி உதிர்க்கும் அதிகார வார்த்தைகளும் அதுவே.
- அதே போல அந்தந்தப் பொருளை அதற்கான இடங்களில் வைக்காததால் அம்மாவிடம் பேச்சு வாங்காத நபர்களும் இருக்க முடியாது.
இதற்குக் காரணம் எந்த ஒரு பொருளும் அதற்கான இடத்தில் இருந்தால்தான் முழுமையான பயன் கிடைக்கும். தவறான இடத்தில் இருந்தால் பயனற்றுப் போவது மட்டுமின்றி, சில தருணங்களில் ஆபத்தாகவும் போகலாம்.
ஆண்களின் விதையும் அவ்வாறுதான் விதைப்பையினுள் இருக்க வேண்டும்
விதை விதைப்பையினுள் இருக்காது வேறெங்கு இருக்கும் எனச் சிலர் புருவத்தை உயர்த்தி, ஆச்சரியத்தோடு கேட்கக் கூடும்.
இறங்காத விதை
குழந்தையானது தாயின் வயிற்றில் வளரும்போது விதைகள் அதனது வயிற்றுக்குள்ளேயே இருக்கும். பிறப்பதற்குச் சிலகாலம் முன்னராகவே விதைப்பையினுள் இறங்கும்.
பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போது விதைகள் ஏற்கனவே விதைப்பையினுள் இறங்கியிருக்கும்.
ஆயினும் சில குழந்தைகளில் அவ்வாறு இருப்பதில்லை. சில வேளைகளில் ஒன்று மட்டும் இறங்காது இருக்கலாம்.
ஒரு பக்கம் இறங்காத விதையின் படம்
சிலரில் இரண்டுமே இறங்கத் தவறியிருக்கும். அவ்வாறு இருந்தாலும் பொதுவாக எந்தவித மருத்துவமும் இன்றி 9 மாதமளவில் தானாகவே இறங்கிவிடும்.
இவ்வாறு விதை இறங்காதிருப்பது பெரும்பாலும் காலத்திற்கு முந்திப் பிறக்கும் குழந்தைகளிலேயே அதிகம் இருக்கிறது. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் என்பார்கள். அத்தகைய குழந்தைகளில் 30 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆயினும் நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 3-4 சதவிகிதமானவர்களையும் பாதிப்பதுண்டு.
தானவே அக்காலத்திற்குள் இறங்கவில்லை எனில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
இறங்கி ஏறும் விதை
சில குழந்தைகளில் விதை இறங்கியிருப்பது அவதானிக்கப்பட்டிருக்கும். ஆனால் பின் ஒரு தடவை சோதித்துப் பார்க்கும்போது அதைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கும்.
இது ஆபத்தற்றது. சிறிய விதைகள், தசைகளின் இறுக்கத்தால் மறைந்து பின்பு வெளிவரும் இதனை retractile testes என்பார்கள்.
இத்தகைய விதைகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. பொதுவாகப் பருவமடையும் போது விதைகள் பருமனடையும். வெளியே வரும்.
இறங்காத விதையை, காலியான விதைப் பை, மாயமான விதைகள், எனத் தமிழில் சொல்வது போலவே ஆங்கிலத்தில் Cryptorchidism, Monorchism போன்ற நாமங்களைச் சூடிக் கொள்வதும் உண்டு.
- விதையானது வளர்ச்சியடைவதற்கு உகந்த சூழல் தேவை. விதைப்பை அதற்கு ஏற்றதாகும். மாறாக அது வயிற்றினுள் இருந்தால் உடலின் வெப்பம் அதன் வளர்ச்சியைப் பாதிக்கும். சரியான காலத்தில் இறங்காவிட்டால் எதிர்காலத்தில் விந்தணு உற்பத்தியாவது பாதிப்புற்று அவன் மலட்டுத்தன்மையை எய்தலாம்.
- இறங்காத விதை எதிர்காலத்தில் கட்டியாக வளர்வதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். புற்றுநொயாக வளரக் கூடும்.
- விதை முறுக்கு testicular torsion என்பது அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய ஒரு நிலையாகும். இறங்காத விதையில் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
- இறங்காத விதை உள்ள சில பையன்களுக்கு ஹெர்ணியா ஏற்படுவதுண்டு.
- மற்றவர்களைப் போல தனது பையில் பொருள் இல்லையே என வளரும் குழந்தையின் மனத்தில் கவலையை ஏற்படுத்துவதுடன் மற்றவர்கள் முன் தான் அவமானப்படுவதாகவும் உணரலாம்.
சிகிச்சை
குழந்தைக்கு 6 மாதமாகும்போதும் இறங்காவிட்டால் மருத்துவரைக் காணுங்கள். அவர் பரிசோதித்து தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.
ஒரு வயதாகும்போதும் இறங்காவிட்டால் சிறு சத்திரசிச்சை மூலம் அதனைச் சரி செய்வார்கள். அதாவது உள்ளே இருக்கும் விதையை விதைப்பையினுள் கொண்டு வந்து சேர்ப்பர்.
இது சிறு சத்திரசிகிச்சையே. குழந்தைக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது.
குழந்தை வளர்ந்த பின்னர் எதிர்காலத்தில் அதற்கு
- மலட்டுத்தன்மை,
- இறங்காத விதையில் பிற்காலத்தில் புற்றுநோய் உண்டாதல்
போன்ற பாரிய சிக்கல்களைத் தடுப்பதற்கு இது அவசியம் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
விதையை இறக்குவதற்கான சத்திரசிகிச்சையின் போது, மிக அரிதாக (5%) அங்கு விதை காண்படாதிருப்பதுண்டு. இயற்கையாகவே விதை அத்தகையவருக்கு வளர்ச்சியடையாததே காரணமாகும். இதை vanished or absent testis என்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தில் குழந்தை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0
விளக்கங்களுக்கு நன்றி ஐயா…
பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க மருத்துவரே
விளக்கம் நன்றாக இருந்தது.மிக்க நன்றி.
வணக்கம்
ஐயா
அருமையான விளக்கம் அறியாத பல விடயங்களை அறியவைத்த உங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி ஐயா திரு டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
sirappana thagavalgal thanthamaiku nandri ayya
டாக்டர் ஐயா! எனது விதைப்பை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சற்று வீக்கமாகமும் பின்னர்( மலம் கழித்த பின்னர்) மிகவும் தளர்வாகவும் உள்ளன, இது ஏதாவது நோயின் அறிகுறியா? அல்லது எல்லோருக்கும் சாதாரணமாக இவ்வாறு தான் இருக்குமா?
அதிகாலையில் சற்று இறுக்கமாகத் தெரிவது இயல்பானதே.
Sir, ennudaya testis la onnu perisahavum onnu small size la um different ah iruku. Ithu vericocele problem ah?
இயல்பாகவும் இருக்கலாம்
நீங்கள் சொன்ன vericocele ஆகவும் இருக்கலாம்.
hydrocele ஆகவும் இருக்கலாம்.
நேரடியாக மருத்துவரைக் காண்பதே நல்லது
Sir, scrotum test panniten.(mild prominence of left pampiniform plexus of vein.however there is no reflux on valsalva maneuver.otherwise normol study of scrotum.) ithu tha report. Am un married. Ithu enna problem.itha epdi sari pandrathu?Naa marriage pannina kulanthai pirakuma? Pls reply me. Thanks
திருமணம் செய்யலாம்
Seminal Fluid analysis செய்து பாருங்கள்
சந்தேகம் எனில் சத்திர சிகிச்சை நிபுணரை அணுகுங்கள்
Doctor please itha epdi solve pandrathu nu sollunga. Intha problem innum increase aha vaaipu iruka?
Please sir reply me. Ithunala enaku ethathu problem varuma? Kulanthai pirakuma? Intha problem increse ahuma?nswer me sir.
Sir intha problem operation panna ready auiduma? Operation pannalana innum increase ahuma?
Urologist, ithu problem illa. Paya pada venam nu solranga. Unmaya doctor?
Please answer me doctor. Enaku romba payama iruku. Plz answer pannunga.plz plz plz
Sir,
scrotum test panniten.( Normal study of right testis. Lift testis not seen in left scrotal sac. Lift testis like structure seen in left inguinal region near deep inguinal ring.) ithu tha report. Sir, I am married. Ithu enna problem.itha epdi sari pandrathu? Please reply me.
Thanks & Regards
Hari……
நீங்கள் ஒரு Surgeon னைக் காணுங்கள். அதைக் கீழே இறக்க வழியுண்டு.
உள்ளேயே இருந்தால் பின் பாதகங்கள் ஏற்படலாம்.
Sir, my penis erection ahum bothu left testis la narambu thadicha maadiri ahuthu.flaccid level la apdi illa. Am un married.ithu problem ah? Future la problem varuma? Please reply me. Thanks
பிரச்சனை இருக்காது. சந்தேகம் எனில் ஒரு மருத்துவரை நேரில் சென்று பாருங்கள்
*
Sir my penis erection ahum bothu left testis la,adila narambu thadicha maadiri ahuthu.normal ah irukum bothu apdi illa.ithu problem(vericocle)ah? Am un married. Future la ithanala vinthu kuraya vaaipu irukaa? Answer me. Thanks
நீங்கள் சொல்வது சரியாகப் புரியவில்லை. மருத்துவரைக் கண்டு பேசுங்கள்
sir,
Ean penis’lla cina cina pimbales madhiri irruku pls answer me sir,
இதைப் நேரில் பார்காமல் சொல்லுவது சிரமம்
எனது நண்பருக்கு தற்போது 54 வயதாகிறது .
அவருடைய விதைப்பை தற்போதும் சிறியதாகவே இருப்பதாக கூறினார்.அவருக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கிறார்கள் .உடலுறவில் இப்போதும் நாட்டம் இருப்பதாக சொன்னார். இதனால் ஏதாவது பாதிப்பு உண்டா ….
அதனால் பாதிப்பு இருக்காது
Hello Dr.
I had a epididymoorchitis on right side testis, As per doctor advice, I took Hetrazon 100, pain gradually decreased & been cured on right side. But now i’m feeling pain on left side vascular.
Again i was consulting my doctor. He said it may spread into other side. Also he was advising me to continue Hetrazon 100 tablet.
Though under treatment, While slightly striking on both testicles, i’m feeling pain on my testicles.
Do i need to take this tablet on my lifetime & I’m really concerning about this, how long it will take as i comeback to normal life
Ram
May be secondary bacterial infection
Why not do a urine full report and full blood count
Thank You Sir,
I understand, but why I’m feeling pain, when slightly striking on both testicles, though right side got already cured.
என்னுடையவலதுவிரை கீழே இறங்காமலே இருந்து சர்ஜரி பன்னி அகற்றிவிட்டார்கள் எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கா டாக்டர்
விந்துப் பரிசோதனை செய்து பாருங்கள்
எனது மகன் பிறந்து நான்கு நாட்கள் ஆகிறது அவனுக்கு இரண்டு விதைப்பையில் ஒன்று மட்டுமே உள்ளது இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்வது என்று தெறியாமல் உள்ளேன் .எனது மகள் பிறந்து மூன்றறை வருடம் கழித்து பிறந்தான் இருவருமே சிசேரியன் மூலம் பிறந்தனர்
எனது மகனின் எதிர்காலம் பற்றி மிகுந்த மன உலைச்சலில் இருக்கேன். எதிர் காலத்தில் ஆன்மை தன்மை இருக்குமா இப்போது நான் என்ன செய்வது..
ஆறு மாததற்குள் இறங்கிவிடும்
இல்லையேல் மருத்துவரிடம் காட்டவும்
அய்யா என்னுடைய விதை பையில் ஒரு விதைதான் உள்ளது இதற்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும் எதிர்காலத்தில் எதாவது பிரச்னைவருமா
உங்கள் மருத்துவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்
காரணத்தை ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்