கண் நோய்கள் பலவாகும். இருந்தாலும் எமது பகுதியில் கண்நோய் என்றால் கண்சிவந்து பீளை வடிகிற தொற்று நோயையே கண்நேய் என்பர்கள்.
![]() |
Thanks:- commons.wikimedia.org |
தமிழகத்தில் மட்ராஸ் அய் என்பார்கள்.
இது கண்ணின் வெளிப் புறத்தில் உள்ள கொன்ஜன்ராவில் ஏற்படுகின்ற ஒரு தொற்று நோயே ஆகும். ஆங்கிலத்தில் (conjunctivitis) என்பார்கள். அதாவது கண்ணின் வெண்மடலில் ஏற்படுகிற நோயாகும்.
வெயிலும் வெக்கையும் தீவிரமாக இருக்கும் இந்தக் காலம் இந்நோய் தொற்றுவதற்கு ஏற்ற காலம் ஆகும்.
அறிகுறிகள் எவை?
- கண் சிவந்திருக்கும்
- கண்ணால் அதிகம் நீர் வடியலாம்.
- கண்ணிற்குள் எதோ விழுந்து அராத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம்.
- கண்மடல்கள் வீங்கியிருக்கும்.
- பீளை வடிவதுடன்,
- சற்று அரிப்பும் இருக்கும்.
- காலையில் கண்வழிக்கும்போது கண்மடல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கலாம்
இது பொதுவாக வைரஸ் கிருமியால் தொற்றுவதாகும். ஆனால் பக்றீரியா கிருமியாரல் தொற்றுகின்ற கண்நோய்களும் உண்டு. தூசி மகரந்தம் போன்றவற்றிற்கு ஒவ்வாமையால் ஏற்படுகின்றவையும் உண்டு.
பொதுவாக இது ஆபத்தானது அல்ல. தானாகவே சில நாட்களில் குணமாகிவிடும்.
மருத்துவரை எப்பொழுது காண வேண்டும்?
ஆயினும் கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியமாகும்.
- ஒரு கண்ணில் அல்லது இரு கண்களிலும் ஓரளவு அல்லது தீவிரமான வலி இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியமாகும்.
- வெளிச்சத்தைப் பார்க்க முடியாதபடி கண் கூச்சம் இருந்தால் அவசியம் காண வேண்டும்.
- அதே போல பார்வை மங்கலாக இருந்தாலும் மருத்துவரைக் காணுங்கள்.
- சாதாரண கண்நோயின்போது கண்கள் கடுமையான சிவப்பாக இருப்பதில்லை. மங்கலான சிவப்பு அல்லது பிங்க் கலரிலேயே இருக்கும். எனவே கண் கடுமையான சிவப்பாக இருந்தால் மருத்துவரைக் காண வேண்டும்.
- நோயெதிர்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அவசியம் காண வேண்டும். உதாரணமாக HIV தொற்றுள்ளவர்கள், பிரட்னிசொலோன் போன்ற ஸ்டீரொயிட் மருந்து பாவிப்பவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
- நோயின் அறிகுறிகள் படிப்படியாகக் குறையாது வர வர தீவிரமாபவர்கள்.
- வேறு கண் நோயுள்ளவர்களும்; அதற்கான மருந்துகளை கண்ணிற்கு இடுபவர்களும் உட்கொள்பவர்களும்.
தொற்றுவதைத் தடுப்பது
ஒவ்வாமையால் ஏற்படும் கண் நோயகள் தொற்றுவதில்லை
ஆனால் வைரஸ் மற்றும் பக்றீரியா கிருமிகளால் ஏற்படுபவை வேகமாகத் தொற்றும்.
சுகாதார முறைகளைக் கையாள்வதன் மூலம் தொற்றுவதைத் தடுக்கலாம்.
ரிசூ உபயோகித்தால் அதனை உடனடியாக கழித்து அகற்றிவிட வேண்டும்.
![]() |
Thanks www.pharmacytimes.com |
கண்ணிற்குள கை வைக்காதிருத்தல், கண்ணைத் தொட்டால் கைகளையும், துணியால் துடைத்தால் அதையும் உடனடியாகக் கழுவிடுதல் முக்கியமாகும்.
![]() |
Thanks – www.sophisticatededge.com |
கண் மருந்துகள் விடும்போது அவை கண்ணில் முட்டாதபடி சற்று உணரத்தில் பிடித்து விட வேண்டும்.
![]() |
Thanks :- www.doctortipster.com |
கண்நோய்கள் பற்றிய எனது முன்னைய பதிவுகள்
கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல் தடுப்பது எப்படி?
கண் மருந்திடுபவர்கள் அவதானிக்க வேண்டியவை
கண்களின் பாதுகாப்பு பற்றிய சில தவறான நம்பிக்கைகள்
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை
0.0.0
சிறந்த உளநல வழிகாட்டல்
தொடருங்கள்!
வணக்கம்
ஐயா.
நல்ல அறிவூட்டல்ப்பதிவு வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
அருமையான பதிவு.
நன்றி சார்.
நன்றி ரட்ணவேல் ஐயா