நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன் ஞாயிறு தினக்குரலிலின் பனுவல் பகுதியில் புலோலியூரின் இலக்கியகர்த்தாக்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடர் எழுதி வருகிறார்.
இன்றைய கட்டுரையில்புனைகதை சாரா இலக்கியம் படைப்பவர்கள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளார்.
இந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னைய இக் கட்டுரையில் எனது எழுத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.
இதைத் தவிர திரு.பேராசிரியன், வே.ஆறுதுகம், வேல்நந்தகுமார், பாலவயிரவநாதன், பேராசரியர் வேலுப்பிள்ளை, பேராசரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசரியர் சண்முகதாஸ் உள்பட பலரைப் பற்றிய தகவல்களையும் தந்துள்ளார்.
இதில் என்னைப் பற்றி எழுதியவற்றை ஸ்கான் பிரதி பண்ணி உங்களுடன் பகிர்கிறேன்.
என்னைப் பற்றி விரிவாக எழுதியிருக்கும் புலோலியூர் இரத்தினவேலோன் அவர்களுக்கும் பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகள்
‘மூச்சடையான் என்று எல்லோரும் பகடி பண்ணுறாங்களாம். இவன் பள்ளிக்கூடத்திற்கே போகமாட்டன் என்று அடம் பிடிக்கிறான்’.
கோச்சடையான் வந்த நேரம் இவனை மூச்சடையான் ஆக்கிவிட்டார்கள்.
இவன் பேசினால் சொற்கள் தெளிவாக வருகுதில்லை. ஙா ஙா என்று குரல் அடைச்சுக் கொண்டு அண்டங் காக்கா கத்துவது போல வருகிறது.
மூக்கால் கதைப்பவர்களை நீங்கள் எங்காவது சந்தித்திருப்பீர்கள். ஏன் உங்கள் வீட்டில் கூட யாருக்காவது ஒரு சமயத்தில் அவ்வாறான சத்தம் வந்திருக்கலாம். ஆம் பெரும்பாலன அத்தகைய குரல் மாற்றங்கள் தற்காலிகமானவை. சிறிது காலத்தில் தானாகவே மாறிவிடும். வேறு சிலருக்கு குணமடையக் கூடிய காலம் எடுக்கும்.
ஆனால் சிலர் குழந்தைப் பருவத்தில் பேசத் தொடங்கிய காலத்திலிருந்தே அவ்வாறே தொடர்ந்து மூக்கால் பேசுவதைக் காணலாம். இவற்றில் பெரும்பாலனவற்றை பொருத்தமான சிகிச்சை மூலம் மாற்றிவிடலாம். மிகச் சிலவே சிகிச்சைக்கு போதிய பலன் கொடுக்காதவையாக இருக்கும்.
எவ்வாறு ஏற்படுகிறது
ஒருவர் பேசும் ஒலியானது வாயிலிருந்து வருகிறது என்றே நாம் எண்ணுகிறோம். ஆனால் நாம் பேசும்போது காற்றானது உண்மையில் வாயினூடக மட்டுமின்றி மூக்கின் ஊடாகவும் வெளியேறுகிறது. மூக்கினாலும் வாயினாலும் வெளியேறும் காற்றின் அளவு சரியான விகிதாசாரத்தில் அமைந்திருந்தால் மட்டுமே குரல் இயல்பானதாக இருக்கும். இவற்றின் அளவில் ஏற்றத்தாழ்வுகள்; ஏற்படுவதே குரல் ஒலிமாற்றங்களுக்கும் மூக்கால் பேசுவதற்கும் காரணமாகும்.
குரல் அடைப்பதும் கரகரப்பான தொனியில் பேசுவதும் முற்றிலும் வேறானது. அது குரல் வளையில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படுவதாகும்.
இரண்டு வகை மூக்கால் பேசுதல்
மூக்கால் பேசுவதில் இரண்டு அடிப்படை வகைகள் உண்டு
முதலாவது வகையில், பேசும்போது மூக்கின் ஊடாக வெளியேறும் காற்றின் அளவு குறைந்திருக்கும். அதை hyponasal speech என்பார்கள். அதாவது பேசும் போது நாசின் பங்களிப்பு குறைவாக இருக்கும். இவ்வகைப் பேச்சு பெரும்பாலும் சளி, மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனை, மூக்கு எலும்பு வளைவு போன்றவற்றால் ஏற்படும்.
இரண்டாவது வகையில் ஒருவர் பேசும்போது தேவைக்கு அதிகமான அளவு காற்று மூக்கின் ஊடாக வெளியேறுவதால் குரல் ஒலி வித்தியாசமாக ஒலிக்கும். இதை hypernasal speech என்பார்கள். இது பொதுவாக பிறப்பில் இருந்தே வருவதாக இருக்கும். பிளவுண்ட அண்ணத்துடன் (Cleft palate) பிறப்பவர்களை முக்கிய உதாரணமாச் சொல்லலாம்.
காரணங்கள் எவை?
காரணங்கள் பல வகைப்படலாம்.
சுவாச மேற்தொகுதியில் கிருமித் தொற்று
முக்கிய காரணம் மூக்கு தொண்டை ஆகிய சுhவாசத் தொகுதியின் மேற்பகுதியில் கிருமித் தொற்றால் ஏற்படும் சளி போன்ற அறிகுறிகள்தான். ஆயினும் சளி ஏற்படும் அனைவருக்கும் மூக்கால் பேசுவது போன்ற குரல் மாற்றம் ஏற்படும் என்றில்லை.
அது நாட்பட்ட சைனஸ் நோயாக (sinusitis) மாறும்போதே இது பெரும்பாலும் நிகழ்கிறது. நாசின் இருபுறங்களிலும் உள்ள காபால எலும்பில் காற்றறைகளில் (paranasal sinuses) கிருமித் தொற்றும் அதன் விளைவாக அழற்சியும் ஏற்படுவதை சைனஸ் பிரச்சனை என்போம். இது மீண்டும் மீண்டும் ஏற்பட்டு நீண்ட காலத்திற்கு தொடரும்போது இது (chronic sinusitis) ஆக மாறும். இதன்போது அந்தக் காற்றறைகளில் உள்ள மெனசவ்வுகள் தடிப்படைந்துவிடும். இது மூக்கால் பேசும் குரல் மாற்றத்திற்குக் காரணமாகும்.
ஒவ்வாமை அழற்சிகள்
தூசு, சுவாத்திய மாற்றங்கள், கடுமையான மணங்கள், மகரந்தம் போன்றவை பலருக்கு ஒவ்வாமை அழற்சியை மூக்கில் ஏற்படுத்தும். இதனால் மூக்கால் நீர்வடிதல், மூக்கடைப்பு, தும்மல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதன் தொடர்ச்சியாகவே குரல் மாற்றம் நிகழும். ஆயினும் இது தொடர்ச்சியாக நீடிக்காது. தற்காலகமாக வந்து மாறும்.
அடினொயிட் வீக்கம்
அடினொயிட் வீக்கம் மற்றொரு காரணமாகும். அடினொயிட் என்பது எமது நாசியின் பின்புறத்தே அண்ணத்தில் உள்ள நிணநீர் கட்டியாகும். கிருமித் தொற்றுகளால் இது வீக்கமடையும். நீண்டு தொடரும் இப் பிரச்சனையால் குறட்டை, மூக்கால் பேசுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆன்ரிபயோரிக் மூலம் இதைக் கட்டுப்படுத்துவது முடியாது. பெரும்பாலும் சத்திர சிகிச்சை தேவைப்படும்.
மூக்கின் இடை எலும்பு வளைவு
எமது மூக்கின் இரு பக்கங்களையும் எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவற்றால் ஆன Septum இரண்டாகப் பிரிக்கிறது. இது எப்பொழும் சரிசமமாக முக்கைப் பிரிப்பதில்லை. ஒரு பக்கமாக கூடுதலாக வளைந்திருக்கலாம். அவ்வாறு வளைந்திருப்பதையே மூக்கின் இடை எலும்பு வளைவு (Deviated nasal septum) என்கிறோம். இதனால் மூக்கடைப்பு, குரல் மாற்றம், குறட்டை, சைனஸ் தொற்றுநொய் போன்ற பல அறிகுறிகள் தோன்ற வாய்ப்புண்டு.
மூக்கெலும்பு வளைவு பிரச்சனைளானது மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. சிறியதாக பெரியதாகவோ 80 சதவிகிதமான மக்களில் இது காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இது பிறவிக் குறைபாடே என்றபோதும் விழுந்து அல்லது அடிபட்டு சேதம் அடைவதாலும் மூக்கு எலும்பு வளைவதுண்டு.
இருந்தபோதும் மிகப் பெரும்பலானோரில் மூக்கு எலும்பு வழளவினால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. சத்திரசிகிச்சை மூலம் வளைவைச் சரிசெய்யலாம்.
ரெபுனேட் பொருமல் turbinate hypertophy
இதுவும் குரல் மாற்றங்களுக்குக் காரணமாகலாம். எமது மூக்கின் உட்புறத்தைப் பார்த்தால் அங்கு கட்டிபோல எலும்பு துருத்திக் கொண்டிருப்பதைக் காணலாம். மூக்கின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று ரெபுனேட் இருக்கின்றபோதும் கீழே உள்ளதே பெரும்பாலும் தெரியும். மூக்கினுள் செல்லும் காற்றை ஈரலிப்பாகவும் வெதுnதுப்பாகவும் வைத்திருக்க இது அவசியமானதாகும்.
இது வழமையைவிட அதிகமாக வீக்கமடையும்போது மூக்கடைப்பு, மூக்கால் நீர் வடிதல், முக்கால் பேசுதல் போன்ற பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். தாக்கம் அதிகமானால் சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
மூக்கினுள் நீர்க்கட்டி
சைனஸ் தொற்று நோய் மற்றும் ஒவ்வாமையால் ஏற்படும் அழற்சி காரணமாக மூக்கில் பொதுவாக நீரக்கட்டிகள் (Nasal polyps) தோன்றுகின்றன. இவை காற்றின் பாதைக்கு தடையாக இருப்பதன் காரணமாக குரலில் மாற்றம் ஏற்படுகிறது. ஓவ்வாமைக்கான மாத்திரைகள், மூக்கிற்கான ஸ்டிரொயிட் .ஸ்ப்ரே மருந்துகளை உபயோகிப்பதன் மூலம் அவற்றைக் குணப்படுத்தலாம்.
அந்நியப் பொருட்கள்
குழந்தைகள் மூக்கிகுனுள் ரபர் துண்டுகள், குண்டுமணி போன்றவற்றை விளையாட்டாக வைத்துவிடும்போதும் காற்றின் பாதை தடைப்பட்டு குரல் மாற்றம் அடையலாம். ஆயினும் மூக்கு அடைப்பது, மூக்கிலிருந்து துர்நாற்றம் வீசுவது போன்ற அறிகுறிகளே இங்கு மேலோங்கியிருக்கும்.
அரிதான காரணங்கள்
பிளவுண்ட அண்ணம், வேறு பல குரொசோம் நோய்கள், போலியோ. மையஸ்தீனியா கிராவிஸ், போன்ற பல்வேறு காரணங்களாலும் மூக்கால் பேசுதல் ஏற்படக் கூடும். ஆயினும் அவை மிக அரிதாகவே ஏற்படும் நோய்களாகும்.
அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
மூச்சடையானுக்கு அடினொயிட் வீக்கம் இருந்தது. காது மூக்கு தொண்டை நிபுணரிடம் அனுப்ப வேண்டியதாயிற்று.
அவனிடம் இருந்த தாழ்வுணர்ச்சி அகன்றது. ‘பாடசாலைக்குப் போகாதை’ என வேறு காரணங்களுக்காகத் தாய் தடுத்தாலும் கேட்கிறான் இல்லை. நட்டுப் பிடிச்சு போயே தீருகிறான்.