இது ஒரு உண்மை கதை. நாவல் வடிவில்.நதியா என்ற பெண், அதுவும் 15 வயது கூட நிரம்பிய அந்த சிறுமி தனது தந்தையாலேயே தங்கள் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். காரணம் உடலுறவு அல்லாத பாலியல் செயல்பாட்டில் விளையாட்டு தனமாக ஈடுபட்டுள்ளாள் என்பதற்காக.

கணவனை எதிர்த்தாள் போன்ற குற்றங்களுக்காக பெண்ணை, கல் எறிந்து கொல்லப்படுவதும், வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருட்டறையில் பூட்டப்படுதும் அந்த சமுதாயத்தின் கேள்விக்கு உட்படுத்தப்படாத நடைமுறைகள்,
சுல்தானா என்ற ஒரு இளவரசி தனது வாழ்விலும் வேறு சவூதி அரேபிய பெண்களுக்கும், பெண்கள் என்ற ரீதியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், சந்தித்த ஓரவஞ்சகங்களையும் சொல்லுவதுடன அதற்கு எதிராக போராட முயல்வதுமே இந்த நூல்.
அதில் தோற்றுளா வென்றாளா என்பதை நூலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
சுல்தானாவின் சகோதரி பதினாறு வயது மட்டுமே. இத்தாலி சென்று ஓவியம் கற்க வேண்டும் என்றும், திரும்பி வந்து கலைக்கூடம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறாள்.
திடீரென அவளது தகப்பன் அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்; அவளது எதிர்ப்புக்கு மத்தியில். மணமகனுக்கு வயது 65. ஏற்கனவே இரண்டு மனைவிகள். இவள் மூன்றாவள் ஆகப்போகிறாள். அவளது தகப்பனைவிட மணமகன் முதியவர்.
மகளது எதிர்ப்புகளை மறுத்து அவரை மணமகனாக தேர்ந்தெடுத்தற்கு காரணம் அவர் தனது தொழில் வளர்ச்சிக்கு உதவுவார் என்பதேயாகும்.
மறுத்த அவளுக்கு ஊசி மருந்து ஏற்றி அரை மயக்க நிலையில் வைத்து திருமணம் செய்து வைக்கிறார்.
எட்டு வயதுதான் சிறுபெண்ணை இவளது தமையனும் அவனது நண்பனும் சேர்ந்து குருதி கொட்டக் கொட்ட பாலியல் வன்முறை செய்கிறார்கள். தகப்பனாருக்கு சொல்வோம் என்று இவள் சொல்ல அவர்கள் சிரிக்கிறார்கள். காரணம் தகப்பனார்தான் பணமும் விலாசமும் கொடுத்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.
ஆண் பிள்ளைகளை பாசத்துடன் வாரிசாக வளர்ப்பதும், பெண் பிள்ளைகள் வேண்டா வெறுப்பாக வளர்ப்பதும் அங்கு வழமை.
ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் அவளை விவாகரத்து செய்துவிடுவது சாதாரணம்.
பெண்களுக்கு எதிரான, அவர்களை இரண்டாம் தரப்பு பிரஜைகளாகி நடத்துவதை அறியும் போது கோபமும், கவலையும் கொண்ட உணர்வு எழுகிறது இந்த நாவலைப் படிக்கும் போது.
பெண்களுக்கு எதிரான இவ்வளவு கொடுமையும் மதத்தின் பெயரால் செய்யப்படுகிறது. ஆனால் மதம் அவ்வாறு சொல்லவில்லை. தீவிர மதவாதிகளின் பிழையான புரிதல்களே காரணம் என்பதை நூலின் ஊடே புரிந்து கொள்கிறோம்.
1965 ற்கும் 1985 ற்கும் இடைப்பட்ட காலத்தில் சவூதி அரேபியாவின் மன்னராட்சி காலத்தின் உண்மை நிகழ்வுகள் மையமாக வைத்து, பெயர்களை மாற்றி எழுதப்பட்டுள்ளது.
உண்மையான பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன. இல்லையேல் அவள் கண்டு பிடிக்கப்பட்டு கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவாள்.
1988 ல் முதல் முதலாக இது எழதப்பட்டது. நான் படித்தது இரவல் புத்தகம்தின். 1995 ல் வெளியான மலிவுப் பதிப்பு
மறுமொழியொன்றை இடுங்கள்