>திருமதி வைத்திலிங்கம் மாணிக்கம் ஆசிரியை
பழைய மாணவர்கள் பலருக்கும் மாணிக்கம் ஆசிரியை நினைவு இருக்கக் கூடும். பாடசாலைக்கு முதல் முதலில் வரும் குழந்தைகளுக்கு ஒரு தாய்போல மாணிக்கம் ரீச்சர் அன்பு காட்டி அரவணைத்த காரணத்தால்தான் மாணவர்களால் புதிய சூழலுக்கு இசைய முடிந்தது.
எமது பாடசாலையின் ஆண்பிரிவின் முதல் பெண் ஆசிரியை ஆன இவரை இவ்வருட ஆரம்பித்தில் (14.01.2010) நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க இருந்தோம்.
ஆயினும் உடல்நிலை காரணமாக அன்று அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ளnமுடியவில்லை. இருந்த போதும் தான் கற்பித்த பாடசாலையை மறக்காத அந்த நல்ல உள்ளம் ரூபா 10,000 நன்கொடையாக தந்து உதவினார்.
இதில ரூபா 5000 வருடாந்த பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பரிசு அளிப்பதற்காக பாடசாலை நிதிக்கு அனுப்பப் பட்டது. மிகுதி இவ் வருடம் தேவைபபடும் வேறு ஏதாவது முக்கிய பணிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தன்னலமற்ற அவரது பணிக்கு எமது ஒன்றியத்தின் சார்பில் நன்றி சொல்கிறோம்.
வருடாந்தப் பொதுக் கூட்டம் நிறைவுற்றதும் எமது ஒன்றியத் தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் ஆசிரியையின் இல்லத்திற்குச் சென்று தனது முன்னாள் ஆசிரியைக்கு தனது வந்தனங்களைத் தெரிவித்தார். எமது ஒன்றியத்தின் முக்கிய உறுபினரான கனகசுந்தரம் சண்முகசுந்தரமும் அவருடன் கூடச் சென்று தனது வந்தனங்களைத் தெரிவித்தார்.
Read Full Post »