>
“கண்டங்கள் தாண்டி நாம் வந்தாலும் என்றுமே எம்மை இணைத்துக்கொண்டிருக்கும் இவர்கள்!!”
அது ஒரு YouTube இணைப்பு.
இசையில், மெல்லிசையில் சங்கீதத்தில், ஆர்வமுள்ளவர்களுக்கு அற்புதமான அனுபவத்தைத் தரக் கூடியது.
ஒரு இசை அல்பம். தபலாவும் வயலினும் இணைந்து ஒலிக்கிறது. ஷாகீர் ஹீசைனும் குன்னக்குடி வைத்தியநாதனும் இணைந்து இசைக்கிறார்கள்.
மேலைத்தேய, ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசைகளின் சங்கமம்
அதைக் கேட்க முன்னர் கீழே பதிவின் இறுதியில் உள்ள RAGGA வை mute பண்ணுங்கள். இல்லையேல் பாரதியின் நிற்பதுவே நடப்பதுவே குறுக்கிடும்.