Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஓவியம்’ Category

>
இது ஒரு மாணவன் வரைந்த ஓவியம். பெயர் புஸ்பலிங்கம் சுரேந்தர். அண்மையில் யாழ் சென்றபோது கொற்றாவத்தை, பொலிகண்டி, வல்வட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவரைச் சந்தித்தேன். ஹாட்லிக் கல்லூரியில் ஏ.எல். உயிரியல் கற்று இப்பொழுது பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளார். மிகத் திறமையாக ஓவியம் வரைவார். இவர் வரைந்த பல ஓவியங்களைக் காணக் கிடைத்தது. இயற்கைக் காட்சிகள், உருவங்கள், சுவாமிப் படங்கள் என தனது கைவண்ணத்தை தாராளமாகவே பதித்துள்ளார்.

பிள்ளையார், லஷ்மி, ஆஞ்சநேயர், இயேசு பிரான் எனப் பல. இவற்றில் பல கோட்டோவியங்கள். உருவங்களின் அங்க அமைப்பும், உருவ நேர்த்தியும் மிக அற்புதம். இவற்றை அவர் மிகுந்த பிரயாசை இன்றி மிக வேகமாக வரைந்து முடிப்பதாக அறிந்தேன். இயல்பான ஆற்றல் நிறைந்திருக்கிறது.

வண்ணங்கள் பற்றிய உணர்வும், அவற்றின் சேர்த்தியும், ஓழுங்கிசைவும் இந்தச் சிறு வயதிலேயே கைகூடியிருப்பது அதிசயிக்க வைக்கிறது. இயல்பாகவே கலை உள்ளம் கொண்ட இவருக்கு பல்துறை ஆர்வம் இருக்கிறது. கவிதை, கட்டுரை, சங்கீதம் எனப் பல. பாடசாலை மட்டத்திலும், வலய மட்டத்திலும் பல பரிசில்களை வென்றுள்ளார். ஆங்கிலப் பேச்சுப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.

இவரது திறமை நாட்டு நிலைமையால் வெளியுலக்கிற்குத் தெரியாது முடங்கிக் கிடக்கிறது. கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றின் மாணவனாக இருந்திருந்தால் நிச்சயம் ஒரு ஓவியக் கண்காட்சி வைத்து அவரது திறமை வெளியுலகிற்குத் தெரிந்திருக்கும். பத்திரிகை, தொலைக்காட்சி எனப் புகழ் பெற்றிருப்பார். அவருக்கு உங்கள் பாராட்டைத் தெரிவித்து ஊக்கம் அளியுங்களேன்.

இவரது தந்தையார் புஸ்பலிங்கம். வடமராட்சியில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடைமையாற்றுகிறார்.

Read Full Post »