சென்ற 31.12.2009 பௌர்ணமி தினத்தன்று கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் தலைவர் டாக்டர் எம்.கே.முருகானந்தன், செயலாளர் சு.சற்குணராஜா மற்றும் திரு.இராஜ்.சுப்பிரமணியம், திரு.க.சண்முகசுந்தரம், திரு.க.சச்சிதானந்தம், திரு.க. இரத்தினவடிவேல் ஆகியோர் கண்டிக்கு வருகை தந்தனர்.
கண்டி இந்து வாலிபர் சங்கக் கட்டடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு ஒன்றியத்தின் கண்டி இணைப்பாளராகச் செயற்படும் திரு.சி.வாசுதேவன் அவர்கள் தலைமை தாங்கினார். கண்டிப் பகுதியைச் சேர்ந்த பதினாறு மேலைப்புலோலி சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
சி.வாசுதேவன் அவர்கள் தனது தலமையுரையில் சங்கத்தின் அவசியம், அதில் கண்டி வாழ் மேலைப்புலோலி சமூகத்தினரின் பங்களிப்பின் அவசியம் போன்றவற்றைக் கூறி பாடசாலையின் வளர்ச்சியில் கண்டிச்சமூகம் அக்கறை செலுத்த வேண்டுமெனக் கூறினார்.
அடுத்து கொழும்பு ஒன்றியத்தின் தலைவர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் உரையாற்றினார். தான் ஊரில் 2005-2006 காலப்பகுதியில் பணியாற்றிய சமயம் புதிதாக அதிபரான திரு.மு.கனகலிங்கம் தன்னை வந்து சந்தித்ததையும், அதன் பலனாக பாடசாலை நடந்த கூட்டங்களில் பங்கு பற்றியதையும், தொடர்ந்து அதன் வளர்ச்சியில் அக்கறையுடன் செயற்பட்டதையும் கூறினார். கொழும்பு வந்தவுடன் இங்குள்ள பழைய மாணவர்களுடன் கலந்துரையாடி, 2007ம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தன்று எமது பாடசாலையின் பழைய மாணவர்; ஒன்றியத்தை ஆரம்பித்ததையும் சுட்டிக்காட்டி ஒன்றியம் கடந்த மூன்று ஆண்டுச் செயற்பாடுகளையும் விளக்கினார்.
தொடர்ந்;து திரு.இராஜ் சுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றினார். அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வருட பரிசளிப்பு விழாவில் தான் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதையும், பாடசாலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றகரமான மாற்றங்களையும், அதிபரின் ஆர்வத்துடனான ஆற்றல் மிக்க செயற்பாடுகளையும் விளக்கிக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து திரு க.சண்முகசுந்தரம் அவர்கள் பெறுமதி மிக்க பழைய மாணவர்களின் விபரங்களைப் திரட்டுவதன் அவசியத்தையும், அவற்றை நூலாகவோ அன்றி கோவையாகவோ பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றார். இன்றைய மற்றும் எதிர்கால மாணவர்களுக்கு இது உந்து சக்தியாக விளங்கும். இதற்காக அங்குள்ளவர்களின் ஒத்துழைப்பை வேண்டினார். தகவல்களைப் பெறுவதற்கான மாதிரிப் படிவம் அனைவருக்கும் வழங்கினார். அத்துடன் ஒன்றியத்தின் அங்கத்துவப் படிவத்தையும் விநியோகித்து சுய விபரங்களையும் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செயலாளர் சு.சற்குணராஜா இதுவரை காலமும் ஒன்றியத்தின் செயற்பாட்டால் பாடசாலை வளர்ச்சிக்கு கிடைத்த நன்மைகளையும் அபிவிருத்திப் பணிகளையும், நினைவுப் பரிசில் வழங்கியோர் விபரங்களையும் ஏனைய உதவி புரிந்தவர் விபரங்களையும் எடுத்துரைத்தார்.
கண்டிச் சமூகத்தினரால் சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
இதன் பின்னர் இரு பகுதியினரும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
திரு பாலதாசன் அவர்கள் போரினால் இடம்பெயர்ந்து பாடசாலைக்கு வந்துள்ள மாணவர்களுக்கு உதவியளிக்க வேண்டியது முக்கிய பணி எனவும், பெற்றோர் இருவரையும் இழந்த மாணவரொருவருக்கு தான் பராமரிப்புச் செலவை அளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
திருமதி.ரகுநாதன் வரலக்ஸ்மி அவர்கள் பௌதிக வளங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள், கல்வி அபிவிருத்திக்கு என்ன பங்களிப்புச் செய்துள்ளீர்கள் எனக் கேள்வியெழுப்பினார்? அத்துடன் சங்கீத பயிற்சி போன்றவற்றிற்கு உதவி அளிப்பதாகவும் கூறினார். எமது பாடசாலை மாணவர்கள் கல்விப் பெறுபேறுகளில் முன்னணயில் நிற்பதைச் சுட்டிக் காட்டிய திரு இராஜ் சுப்பிரமணியம் அவர்கள் கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றம் கருதி ‘மெல்லக் கற்போருக்கான விசேட வகுப்பு’ திட்டம் செயற்படுவது முதலான ஏனைய பணிகளை எடுத்துக் காட்டி விளக்கினார்.
ஆசிரியர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி உளவியற் பயிற்சி போன்றன வழங்கப்படவேண்டுமென திரு ரகுநாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
ஆசிரியர்களுக்குத் தேவையான கணனிப்பயிற்சியை வழங்கி உதவுவதாக திரு கு.திலீபன் தெரிவித்தார்.
கண்டியில் பழைய மாணவர் ஒன்றியத்திறகான இணைப்புக் குழுவை ஆரம்பிக்க வேண்டுமெனவும் அதனூடாக பாடசாலைக்கான அபிவிருத்தியில் ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பட் முடியும் எனவும் டாக்டர் ஐமுகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அத்துடன் றோட்டரிக் கிளப் மூலம் உதவிகள் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் கூறினார்.
ஓன்றிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கு அமைய குழு அமைக்கப்பட்டது. குழு உறுப்பினர் விபரம் வருமாறு.
தலைவர் : திரு.சி.வாசுதேவன்
செயலாளர்: க. பாலதாசன்
பொருளாளர்: சி. வசந்தன்
இணைப்பாளர்: கு.திலீபன்
குழு உறுப்பினர்கள்:-
1. டொக்டர்.க.அருள்குமார்
2. டொக்டர்.க.ஐமுகன்
3. திருமதி.காமாட்சி வாசுதேவன்
4. திருமதி.ப.கதிரவேற்பிள்ளை
5. திரு.சி.குமரலிங்கம்
6. திரு.க.முரளீதரன்
7. திரு.ஏ.நடராஜா
8. திரு.இ.ரகுநாதன்
9. திருமதி.வ.ரகுநாதன்
10. திரு.க.இராமச்சந்திரன்
11. திருமதி.திருமகள் ஸ்ரீஸ்கந்தராஜா
12. திரு.தி.செல்வமோகன்.
13. திரு.V.சிவராஜசிங்கம்
பாடசாலையின் இன்றைய தோற்றம் மற்றும் செயற்பாடுகள் பற்றிய போட்டோக்கள் திரையில் காண்பிக்கப்பட்டன.
அதற்குரிய விளக்கங்கள் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களால் கூறப்பட்டன.
திரு.சி.வசந்தன் எமது பாடசாலையின் அபிவிருத்தியில் முழமனத்துடன் செயற்படும் கொழும்பிலிருந்து வந்த நண்பர்களைப் பாராட்டி நன்றி உரையாற்றினார்.
கூட்டம் 5.30 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.