>எடையைக் குறைப்பதற்கான மருந்துகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.
கடுகு எண்ணெயைக் கப்சியூல் ஆக்கி, எடை குறைக்கும் மருந்து என தொலைக்காட்சியில் நிறைய விளம்பரம் கொடுத்து விற்றதால் ஒருவர் பெரும் பணக்காரர் ஆனாராம்.
இதைக் கேள்விப்பட்ட டாக்டர் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என உளங் கொண்டார்.
தனது கிளினிக் வாசலில் ஒரு விளம்பரம் போட்டார்.
உள்ளே நுழைந்தால் இப்படி ஒரு மருந்து கிடைக்கிறது.
எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களால்
இந்தக் கண்ணாடிக் கடைக்காரருக்கு
அமோக வியாபாரம்.“என்ன எனது எடை அதிகரித்துவிட்டதே!”
“சோறு சாப்பிடாமல் கேக் சாப்பிட்டு,
பால் குடியாமல் கோக் குடித்து,
மீன் சாப்பிடாமல் சொசேசஸ் சாப்பிட்டு
பத்தியம் இருந்தும் இப்படியாகிவிட்டதே”
என அதிசயித்த பெண்ணுக்கு தனது எடை உயர்ந்ததற்கான காரணம் இப்பொழுது புரிந்தது!!!!!
பிள்ளைகள் கொழுப்பதற்கு எத்தனையோ காரணங்கள்.
ஆனால் இந்த அம்மாவின் குழந்தை, கவலையால் கொழுத்ததாம்இவர் தனது உணவில் மிகக் கவனம்.
அதிகம் சாப்பிடுவதில்லை.
சின்னச் சாப்பாடுதானாம்.
அதிகம் சமைப்பதும் இல்லை.
ஆனாலும் எப்படி எடை அதிகரிக்கிறது என்பது அவருக்கும் புரியவில்லை.
இந்த அம்மா எடையைக் குறைப்பதற்கு காலை முதல் இரவு வரை முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.
முழுநேர உடற் பயிற்சிதான். உடற் தசைகளுக்கு. ஆயினும் அவளது எடை குறையவில்லை.
காலை முதல் இரவு வரை கால்களுக்குப் பயிற்சி.
உட்கார்ந்த இடத்திலிருந்து கால்களை ஆட்டியபடியே இருக்கிறாள்.
அது மட்டுமல்ல மற்றொரு தொகுதி தசைகளுக்கும் ஓயாத பயிற்சி.
ஆம் வாய்த் தசை நார்களுக்குத்தான்.
மகன் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்ற கவலை இந்த அம்மாவுக்கு.
தனது ஆசை தீர மகனுக்கு உணவு அளிக்கிறாள்.
ஆனாலும் சாப்பிடுவது வலு குறைவென்ற கவலை.
என்ன கார்ட்டுன்கள் போட்டிருக்கிறார்.
சிரிப்பே வரவில்லை என்கிறீர்களா?
எனக்கு இவற்றைப் பார்க்கும் போது கவலைதான் வருகிறது.
“இலஞ்சம் கொடுத்தாவது
சொர்க்கத்திற்கு விரைந்து போக
வழி தேடுபவர்களைப் பார்த்தால்
சிரிப்பா வரும்?”
எம்.கே.முருகானந்தன்.