விழுகைகளைத் தவிர்ப்பது எவருக்கும் முக்கியமானது.
ஆனால் சுலபமாக எலும்புகள் உடைந்துவிடக் கூடிய முது வயதில் மிக மிக முக்கியமானதாகும்.
விழுகைகளைத் தடுக்க வேண்டுமெனில் முக்கியாக உங்கள் சமநிலை தழும்பாது பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
- எங்கு எப்பொழுது நடமாடினாலும் ஒரு கையிலாவது பொருட்கள் எதையும் பற்றியிராது வெற்றாக வைத்திருங்கள். தற்செயலாக நிலை தழும்பினால், விழாமல் இருப்பதற்காக எதையாவது பற்றிப் பிடிக்க வசதியாக இருக்கும்.
- நடக்கும்போது வேறு எதிலும் கவனத்தைச் செலுத்;தாதீர்கள். பத்திரிகை படிப்பது, மற்றவர்களுடன் பேசி கொண்டு நடப்பது, கடைத்தெருவைப் பிராக்குப் பார்த்து நடப்பது போன்றவற்றால் சமநிலை தவறி விழுந்துவிடக் கூடும்.
- நடக்கும்போது கைகளை முன் பின்னாக வீசி நடப்பதன் மூலம் உடலின் சமநிலையைப் பேண முடியும்.
- தரையில் காலை இழுத்து இழுத்து நடக்காதீர்கள். பாதங்களை தரையியிருந்து தூக்கி திடமாக வைத்து நடவுங்கள்
- போகும் பாதையில் ஒரிடத்தில் திரும்பி நடக்க வேண்டுமாயின் சடீரெனத் திரும்பாதீர்கள். வட்டமடிப்பது போல வளைந்து சென்று திரும்புங்கள்.
- படுக்கையிலிருந்து அல்லது இருக்கையிருந்து எழுந்து நடக்க வேண்டுமாயின் அவசரப்பட்டு எழுந்து உடனடியாக நடக்காதீர்கள்.
- படுக்கையிலிருந்து எழுந்து, உட்கார்ந்து, சற்று நின்று பார்த்து நிலை தழும்பவில்லை எனில் பின்பு நிதானமாக நடவுங்கள்.
- ஓரிடத்தில் சற்று நேரம் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டால் பாதங்களை நெருக்கி வைக்காதீர்கள். உங்கள் தோள் பட்டையின் அகலத்திற்கு பாதங்களைப் பரப்பி வைத்தால் சமநிலை தழும்பாது.
- செருப்புகள் தேய்ந்திருந்தாலும் வழுக்கக் கூடும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்