கறிச் சரக்கில் கொத்தமல்லி
கொத்தமல்லிக் குடிநீர்
கொத்த மல்லிக் கோப்பி
கொத்த மல்லித் தளையில் ரசம், சட்ணி, மற்றும் புரியாணி கறிகளில் சுவையூட்டி எனப் பல.
“யாழ்ப்பாண உணவு முறைகளில் மல்லி இலை பழக்கத்தில் இல்லாவிட்டலும், நாம் வெளிநாடுகளில் இதை பாவிக்கின்றோம்” என Ranjan Vallipuram எனும் நண்பர் இது பற்றி பேஸ்புக்கில் நான்எழுதியபோது கருத்தூட்டம் இட்டிருந்தார். இப்பொழுது இலங்கையிலும் பலர் உபயோகிக்கிறார்கள்
அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றானது சேற்றுப்புண் எனப்படும் tinea pedis நோயைத் தணிக்க கொத்த மல்லி எண்ணெயைப் பூசுவது உதவும் என்கிறது.
சித்த மருத்துவ முறையில் கொத்தமல்லிக்கு இடம் முக்கிய உண்டு
கொத்தமல்லிக் கீரைஉண்ணில் கோரவ ரோசகம் போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையும் சுரம் தீரும்
கச்சுமுலை மாதே! நீகாண்…(அகத்தியர் குணவாடகம்)
எனப் பழம் தமிழ் பாடலில் சொல்லப்பட்டதை மற்றொரு நண்பியான Pathmashany Manick கருத்தூட்டத்தில் சொன்னார்.
நான் கொத்தமல்லி பற்றி எழுத முனைந்ததற்கு காரணம் மேற்கூறிய ஆய்வாகும். அதன் வாசகம் ஆங்கிலத்தில் பின்வருமாறு
“The antifungal activity of coriander oil has already been demonstrated in vitro. Objective: Evaluation of the efficacy and tolerability of 6% coriander oil in unguentum leniens in the treatment of interdigital tinea pedis…………
For 6% coriander oil in unguentum leniens, a highly significant improvement of the clinical signs (p<0.0001) was observed during the entire observation period; the number of positive fungal cultures also tended to decrease (p = 0.0654). The tolerability of the tested substances was good.
Conclusion: Coriander oil is effective and well tolerated in the treatment of interdigital tinea pedis.”
அந்த ஆய்வானது கொத்த மல்லி எண்ணெயினால் சேற்றுப் புண் பூரணமாகக் குணமானதாகக் கூறவில்லை. ஆனால் 14 முதல் 28 நாட்களுக்கு பூசப்பட்டபோது நோயின்அறிகுறிகள் பெருமளவு குறைந்தன.அத்துடன் அதனால் நோயளிகளுக்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை.
சேற்றுப் புண் என்பதை எமது பகுதியில் நீர்ச் சிரங்கு என்றும் சொல்லுவார்கள். இது ஒரு பங்கஸ் கிருமியால் எற்படும் நோயாகும்.
மருத்துவம் செய்யப்பட்ட அந்த சேற்றுப் புண்களை மருத்துவ ஆய்வு கூடப் பரிசோதனை செய்தபோது பங்கஸ் கிருமித் தொற்றுக் குறைந்திருந்தமை கண்டறியப்பட்டது.
எனவே கொத்தமல்லி எண்ணெய்க்கு பங்கஸ் கிருமிக்கு எதிரான குணமும் உண்டு என நம்பலாம்.
சேற்றுப் புண்ணிற்கு இன்றைய ஆங்கில மருத்துவத்தில் பங்கஸ்சுக்கு எதிரான பல பூச்சு மருந்துகள் உள்ளன. அதற்குக் குறையாத போது உள்ளெடுக்கும் மாத்திரைகளும் உள்ளன.
சேற்றுப் புண் நோய் பற்றிய எனது முன்னைய பதிவில் அவை பற்றி விபரமாகக் கூறியுள்ளேன்.