Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘திடீர் மயக்கங்கள்’ Category

ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் திடீரென தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறது என்று மேசையிலேயே படுத்துவி்ட்டார்.

சக ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பொது மருத்துவ நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர் என பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பார்த்தார்கள்.

செய்யாத மருத்துவ ஆய்வு கூட பரிசோதனைகள் மிச்சமில்லை. MRI உட்பட மூளையைப் படமெடுத்துப் பார்த்துவி்டார்கள். எதுவும் பிடிபடவில்லையாம்.
மயக்கம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
  • வயதானவர்களும் பிரஷர் குறைவாக உள்ளவர்களும் உட்கார்ந்த அல்லது படுக்கை நிலையிலிருந்து திடீரென எழுந்து நின்றால் மயக்கம் வருவதுண்டு.
  • திடீரென ஏற்படும் கடும் வலிகள் கூட அவ்வாறு ஏற்படுத்தலாம். 
  • காரணம் எது என நீங்கள் நினைத்தாலும் ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து காரணத்தைக் கண்டறிய முயல வேண்டும்.

சில தருணங்களில் மருத்துவர்களால் கூட ஒருவருக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதைத் துல்லியமாக கணடறிய முடியாதிருக்கலாம்.

கீழ் கண்டவை மயக்கத்தைத் தூண்டுவதற்கான முக்கய காரணிகளாக இருக்கக் கூடும் என அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் சொல்கிறது.
  • சடுதியாக எழுந்து நிற்பது.
  • கடுமையான வெப்பம் உள்ள சூழலில் தீவிரமான உடற பயிற்சி செய்தல் அல்லது கடுமையாக வேலை செய்தல்.
  • மிக வேகமாகச் சுவாசித்தல். இந்த hyperventilating என்பது நோய்களின் போதும் ஏற்படலாம், மன உளைச்சலாலும் நிகழலாம்.
  • மிகக் கடுமையான மனத் தாக்கம் அல்லது துயரம் உடலை மட்டுமின்றி ஒருவரது இரத்த அழுத்தத்தையும் பாதிக்கும்போது அவ்வாறு மயக்கம் ஏற்படுவதுண்டு.
  • சில பிரஷர் மருந்துகளை உட்கொள்ளும்போது திடீரென எழும்போது இரத்த அழுத்தம் குறைவதுண்டு. இது திடீர மயக்கத்திற்குக் காரணமாகலாம்.

காரணம் என்பதைக் கண்டறிந்து மீண்டும் நிகழ்வதைத் தடுங்கள்.

இல்லையேல் ஆபத்தில் மாட்டிக் கொள்ள நேர்வதுடன், தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள், பணச் செலவு மற்றும் மன உளைச்சலைத் தவிர்துக் கொள்ளலாம்.

திடீர் மயக்கங்கள் சில ஆபத்தான நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

  • குறுகிய கால நேரத்திற்குள் பல தடவைகள் ஏற்படுதல்.
  • வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென ஏற்படல் (களைப்பு, வாந்தி, காய்ச்சல், நித்திரைக் குறைவு போன்றவை சில உதாரணங்கள்)
  • குருதிப் பெருக்கு
  • மூச்செடுப்பதில் சிரமம்
  • நெஞ்நு வலி
  • இருதயம் வேகமாகத் துடித்தல்
  • முகம் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் மரப்பது போன்ற உணர்ச்சி
மேற் கூறிய அற்குறிகள் இருந்தால் மயக்கத்திற்கு அடிப்படையான வேறு ஏதோ ஆபத்தான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம். உடனடியாக மருத்துவரை காணுங்கள்.

0.0.0.0.0

Read Full Post »

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?

  • பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.
  • படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.
  • யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.
  • சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.

இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலபேராகும்.

திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன?

  • பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.
  • சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.

மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.

பல காரணங்களினால் இது ஏற்படலாம்.

மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது

கடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.

உதாரணமாக

  • கடுமையான காய்ச்சல்,
  • கடுமையான வயிற்றோட்டம்,
  • சூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல்

போன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.

அதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.

உதாரணமாக

  • காயத்தினால் கடுமையாக குருதிவெளியேறுவது
  • கடுமையான மாதவிடாய் பெருக்கு,
  • மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல்.
  • வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும்
குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம்.

உதாரணமாக

  • குடற்புண்,
  • ஈரல் சிதைவு,
  • புற்றுநோய்கள் எனப் பல.

வேறு காரணங்கள்

  • கடுமையான இருமலும் காரணமாக இருப்பதுண்டு.
  • குக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.
  • திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது.

நீரிழிவு நோயாளரில்

நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.

 

உதாரணமாக

  • தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.
  • விரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.
  • வேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.
நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம்.
  • பாடசாலைப் பிள்ளைகள் வழிபாடுக்காக,
  • இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது விழுவது உதாரணங்களாகும்.

திடீரெனப் படுக்கையை விட்டு எழும்போது பலர் மயங்கி விழுவதுண்டு.

படுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.

படுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும்
  •  சடுதியாக வரும் கடுமையான வலி சிலருக்கு திடீரென மயக்கத்தைக் கொடுப்பதுண்டு.
  • மிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.
  • மது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம்.
  • சில மருந்துகளும் காரணமாகலாம்.
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வீட்டில் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டால் மேற் கூறிய எவையாவது காரணமாக இருக்கக் கூடும்.மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் எனச் சந்தேகித்தால் அவரிடம் சொல்லுங்கள்.

மயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

ஹாய் நலமா வலைப்பூவில் வெளிவந்த கட்டுரை

Read Full Post »