Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தீபாவளி வாழ்த்து’ Category

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மங்களம் நிறைய, மகிழ்வொடு வாழ்த்துவம்!

எங்கெணும் பசியினில் துடியா வாழ்வும்
எம்மிடை பேதங்கள் கூறாப் பிணைவும்
கருத்தினில் மோதலை கைலாகுடன் மதித்தலும்
ஒன்றிணைந்து ஒரு கரமாய்ப் பிணையும் நேசமும்
என்றென்றும் இனிது வாழ வழி காட்டும்.
நன்றி ta.sarugu.com
எங்கள் இடரினை மறக்க
எதிரியென எண்ணித் தூற்றலும்
தூற்றலில் களி கொண்டெழலும்
இத்தனைக்கும் இவர்தாம் காலென
இகழ் ஒலிப்பதும்
வேண்டாம் ஒரு போதும்.
சாபமிட்டுச் சாந்தியடைதல்
ஒருபோதும் ஒண்ணாது

இன மத மொழி பேதமற்ற இணக்கமான வாழ்வு மலரட்டும்.

எங்களை அழிக்கும் நீசன்
வேறெங்கும் இல்லை.
உள்ளத்துள்உறைகிறான்.
உள்ளுறையும் அசுரனை ஒழிக்க
எள்ளளவும் வேண்டாம் கத்தி, குண்டு,
துப்பாக்கியெதுவும் .
கபடமற்ற கனிவான உள்ளம்
காந்தமாய் ஒளி பரப்பும் வதனம்
கனிவான மொழி
இவை போதும்.

எரித்துப் சினத்து அழிக்காது சிரித்து கூடி வாழ்வோம்.

வேறென்ன ஆயுதம் வேண்டும்?
எரித்துப் சினத்து அழிக்காது
சிரித்து கூட வழி வகுக்கும்
நல்லாயுதம் தன்னைக் கைப்பிடித்தால்
நிதமும் தீபாவளி எம் வாழ்வில்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0
சென்ற வருடம் மறந்து போகாத சில வலைப்பூவில் எழுதிய வாழ்த்து

Read Full Post »

>

மங்களம் நிறைய, மகிழ்வொடு வாழ்த்துவம்!
எங்கெணும் பசியினில் துடியா வாழ்வும்
மானிடத்தை பேதங்கள் கூறிடாப் பிணைவும்
கருத்தினில் மோதலை கைலாகுடன் மதித்தலும்
ஒன்றிணைந்து ஒரு கரமாய்ப் பிணையும் நேசமும்
என்றென்றும் இனிது வாழ வழி காட்டும்.
எங்கள் இடரினை மறக்க
எதிரியென எண்ணித் தூற்றுவதும்
தூற்றுவதில் களிகொள்ளவதும்
இத்தனைக்கும் இவர்தாம் காலென இகழ் ஒலிப்பதும்
வேண்டாம் ஒரு போதும்.
சாபமிட்டுச் சாந்தியடைய ஒண்ணாது ஒருபோதும்
எங்களை அழிக்கும் நீசன்
வெளியிடத்தில் இல்லை.
எம்மனத்துள் உறைகிறான்.
உள்ளுறையும் நரகாசுரனை ஒழிக்க
எள்ளளவும் வேண்டாம் கத்தி, குண்டு,
துப்பாக்கியெதுவும் .
கபடமற்ற கனிவான உள்ளம்
காந்தமாய் ஒளி பரப்பும் வதனம்
கனிவான மொழி.
இவைதவிர வேறென்ன ஆயுதம் வேண்டும்?
எரித்துப் சினத்து அழிக்காது
சிரித்து கூட வழி வகுக்கும்
நல்லாயுதம் தன்னைக் கைப்பிடித்தால்
நிதமும் தீபாவளி எம் வாழ்வில்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0

Read Full Post »