Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பரிசளிப்பு விழா 2009’ Category

>

எமது பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா சென்ற 21ம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலையில் நடை பெற்றது.


எமது பாடசாலையின் பழைய மாணவரும், கல்வித் திணைக்களத்தில் பிரதம கணக்காளராக இருந்து ஒய்வு பெற்றவரும், தற்பொழுது இலங்கை முகாமைத்துவ அபிவிருத்தி நிலையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றும் திரு ராஜ் சுப்பிரமணியம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.


எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊக்க சக்தியாகச் செயற்பட்டு பாடசாலையின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை எடுப்பவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.


தனது கணக்காளர் பதவிக் காலத்தில் எமது பாடசாலைக்கு இரட்டை மாடிக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான நிதியைத் திணைக்களத்திலிருந்து பெறுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது இவரே. கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் நாட்டின் நிலை காரணமாக அது நிறைவேறாது அரை குறையாக நிற்பது எல்லோரும் அறிந்ததே.


தற்பொழுது மீண்டும் ஒரு புதிய இரட்டை மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான நிதியைப் பெறுவதற்காக பல் வேறு முயற்சிகளில் அயராது உழைத்து வருகிறார்.


1979ம் ஆண்டில் கல்வித் திணைக்களத்தில் பிரதம கணக்காளராக பணியாற்றிய காலத்திலும் எமது பாடசாலை பரிசளிப்பு விழாவில் ஏற்கனவே பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதை இந் நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

இப் பரிசளிப்பு விழாவின் போது எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பாக பல பரிசுகள் வழங்கப்பட்டன.


புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பணப் பரிசு அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணவருக்கும் ரூபா 1000 வழங்கப்பட்டது.


ஞாபகாரத்தப் பரிசுகள் விபரங்களை ‘வருடாந்த நினைவுப் பரிசுகள்’ பதிவில் பாரக்கவும்.


அமரர் வே.க.கந்தையா ஞாபகமாக அவர் ஸ்தாபித்த S.K.Company யால் வழங்கப்படும் ரூபா 5000.00 நிதியில் பரிசுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.


பரசளிப்பு விழா பற்றிய ஏனைய விபரங்கள், அதிபர் உரை, பிரதம விருந்தினர் உரை, மேலும் புகைப்படங்கள் கிடைத்ததும் வெளியிடப்படும்.

Read Full Post »