Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புதிய வேலைத் திட்டங்கள்’ Category

>பாடசாலை அபிவிருத்திக்கான புதிய வேலைத் திட்டங்கள்.

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் கட்டடங்கள், தளபாடங்கள், விiயாட்டு உபகரணங்கள் உட்பட பொதீக வளத் பற்றாக்குறையில் இருப்பதை அறிவீர்கள். கல்வியிலும் முகாமைத்துவத்திலும் முன்னேற்றம் கண்டு வடமராட்சிப் பகுதியின் சிறந்த ஆரம்பப் பாடசாலையாக கல்வித் திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட போதும் அதன் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எமது ஒன்றியம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொண்டு ஸ்தாபனங்கள் மூலமாக பெரிய திட்டங்களையும், சிறிய அளவிலான திட்டங்களை பழைய மாணவர்கள் மூலமாகவும் நிறைவேற்ற உத்தேசித்துள்ளோம்.

இப்பொழுது அவசரமாகச் செய்யக் கூடிய சில திட்டங்களை பாடசாலை அதிபர் முன்வைத்துள்ளார். ஆர்வமுள்ள பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் இத் திட்டங்களை நிறைவேற்ற முன்வருவார்கள் என நம்புகிறேன். தாங்களாக தனியாகச் செய்து கொள்ளலாம். அல்லது ஒரிருவர் சேரந்தும் நிறைவேற்றலாம். தங்கள் தாய் தந்தையர் அல்லது குடும்ப முக்கியஸ்தர் நினைவாக செய்வதும் நல்லதே.

அவ்வாறு அன்பளிப்பு செய்பவர்களது பெயர், அன்பளிப்புத்தொகை, யாரது நினைவாகச் செய்யப்பட்டதோ அவரது பெயர், நிறைவு செய்யப்பட்ட பணி ஆகியவற்றை குறிக்கும் செய்திப் பலகை பாடசாலை உள் மண்டபத்தில் வைக்கப்படும். ஏற்கனவே நினைவுப் பரிசில்கள் சம்பந்தமாக எமது ஒன்றியம் தயாரித்தளித்த அத்தகைய அறிவுப் பலகை பாடசாலை மண்டபத்தை அலங்கரிப்பது குறிப்பிடத்தக்கது.

அ. பாடசாலை சுற்றுமதிலின் உட்புறத்தில் கல்வி சம்பந்தமான ஓவியங்கள் வரைதலும், ஓவியங்களும்

ஓவ்வொன்றும் ரூபா15,000/- (10துண்டுகள் வரை)

ஆ. வருடாந்த விளையாட்டுப் போட்டி

1) பரிசில்கள் – ரூபா 15,000.00 வருடாந்தம்

2) சிற்றுண்டிகள் ரூபா 10,000.00 வருடாந்தம்

3) போட்டிக் கிண்ணங்கள் ரூபா 10,000.00

4)ஏனைய தேவைகள் தொடர்பானவை (மின்சார ஒலிபெருக்கி, புகைப்படங்கள்,போக்குவரத்து) ரூபா 10,000.00 வருடாந்தம்

இ. கீழ் மட்ட வகுப்பு வளாகத்திற்கு சுற்று மதில் அமைத்தல் (பெண் பாடசாலை)

ரூபா 35,000/- (முன்பக்கம் மாத்திரம்)

ஈ. துவிச்சக்கரவண்டி தரிப்பிடம்- ரூபா 50இ000ஃ-

உ. இரண்டு பாடசாலை கிணறுகளையும் மேற்புறம் மூடி அடைத்தல் (துப்பரவாக வைத்திருப்பதற்கு) – ரூபா 35,000

கிணறுகள் மூடி அடைத்தல்

பாடசாலையின் இரு வளாகங்களிலும் தனித்தனியாக கிணறுகள் உள்ளன. அவற்றிலிருந்து நீர் எடுக்க மோட்டார் வசதியும் உண்டு. ஆயினும் அக் கிணறுகள் சுகாதார முறைப்படி மூடி அடைக்கப்படவில்லை. அதனால் வெளிலுள்ள அழுக்குகளால் அது மாசடையவும் அதனால் மாணவர்களின் ஆரோக்கியம் கெடுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

அந்த இரு கிணறுகளையும் மூடி அடைப்பதற்கு ரூபா 30000.00 (முப்பதினாயிரம்) தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப பாடசாலை முற்பக்க மதில் அமைத்தல்

ஆரம்ப பாடசாலை (முன்னைநாள் பெண்கள் பகுதி) தற்பொழுது முற்கம்பி வேலியால் அடைக்க்பட்டுள்ளது. இது ஓடிவிளையாடும் பிள்ளைகளுக்கு ஆபத்தானது. எனவே சுற்றி மதில் கட்ட வேண்டியுள்ளது.

ஆயினும் பாடசாலையின் இவ்வளாகம் சிறியது ஆகையால் முழுமையாக மூடி மதில் கட்டுவது காற்றோற்றத்திற்கு தடையாக இருக்கம் எனக் கருதுகிறார்கள். எனவே முhண்களை சிமேந்தினால் கட்டி இடைவெளிகளை பிளாஸ்டிக் வலைகளால் அடைப்பபதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக பாடசாலையின் முற்பக்கத்தை மட்டும் இவ்வாறு அடைப்பதற்கு ரூபா 30,000 தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுமதிலில் அறிவு மேம்பாட்டுச் சித்திரங்கள் வரைதல்

பாடசாலைச் சூழல் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு உகந்ததாக அமைதியுடனும், வசதிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது அவர்களின் அறிவு வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அமைய வேண்டும் எனக் கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

உதாரணமாக பாடசாலை வளவினுள் ஒரு மரம் இருந்தால் அதன் பெயர், தாவரவியல் பெயர். பயன்பாடு போன்றவற்றை அதன் மீது ஒரு பலகையில் எழுதித் தொங்கவிடலாம். அதனைப் பார்க்கும் கீழ்வகுப்பு மாணவனுக்கு தாவரத்திற்கு வழமையான பெயரைவிட தாவரவியல் பெயர் என ஒன்று இருப்பதை அறியமுடியும்.

இதேபோல பாடசாலையின் சுவர்களில் பொன்மொழிகள், அறிவியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதுவதாலும், அறிவு மேம்பாட்டுச் சித்திரங்களை வரைவதாலும் மாணவர்களின் அறிவை விசாலமாக்க முடியும். இது ஏற்கனவே கொழும்பு போன்ற வசதியுள்ள பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எமது பாடசாலையிலும் இதனைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

சுவரின் குறிப்பிட்ட பகுதிக்கு மேற்பூச்சுப் பூசி, வரணம் அடித்து, அதன் மேல் சித்திரம் வரைய ரூபா பதினையாயிரும் தேவை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான 10 சித்திரங்களுக்கு மேல் வரைய முடியும்.

விரும்பியவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிக்கு சித்திரம் வரைய நிதியுதவி அளிக்கலாம்.

துவிச்சக்கரவண்டி தரிப்பிடம்-

எமது பாடசாலைக்கு தினமும் பல மாணவர்களும், ஆசிரியர்களும் துவிச்சக்கரத்தில் வருகிறார்கள். பெரிய இரட்டை வாசல் கதவு அமைத்த பின்னர் சைக்கிள்களை தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உருட்டியபடியே உள்ளே கொண்டு செல்லலாம். ஆயினும் அவற்றை ஒழுங்கான முறையில் நிறுத்தி வைக்க தரிப்பிடம் கிடையது. புதிய தரிப்பிடம் அமைக்க ரூபா 50இ000ஃ- தேவைப்படுகிறது.



வருடாந்த விளையாட்டுப் போட்டி

வருடாந்த விளையாட்டுப் போட்டிக்கு பரிசில்கள், சிற்றுண்டிகள், போட்டிக் கிண்ணங்கள், மின்சார ஒலிபெருக்கி, புகைப்படங்கள், போக்குவரத்து போன்ற பல தேவைகள் உள்ளன. அவற்றிற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. இவற்றில் பலவும் வருடாந்தம் செய்யப்பட வேண்டியவையாகும். இதற்கான ஒழுங்கு செய்யப்பட்டால் பாடசாலை வருடாந்தம் எதிர் நோக்கும் செலவிற்கான நிரந்தர ஒழுங்கு செய்யப்பட்டுவிடும்.

இவை பற்றிய தனித் தனி விபரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் ரூபா 45,000 தேவைப்படும். ஆயினும் மொத்தமாக அன்றித் தனித்தனியாகவும் செய்து கொள்ளலாம்.

Read Full Post »