>
கல்விக்கு உரியவள் சரஸ்வதி என்பது எமது சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கை. தினமும் பாடசாலை தொழுமையுடன் ஆரம்பிக்கிறது. மாணவர்கள் தேவாரம் மற்றும் துதிப் பாடல்கள் பாடி தினமும் நாளை அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கும்போது அவர்கள் வணக்கத்திற்கு ஒரு சரஸ்வதி சிலை அவசியம் என சில மாதங்களுக்கு முன்னர் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.
இப்பொழுது எமது பாடசாலையின் இரு வளாகங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு சரஸ்வதி சிலை செய்வதற்கான நிதியுதவி கிட்டியுள்ளது.
- பிரித்தானியாவில் (UK) வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவரான பத்மநாதன் சோதிநாதன் அவர்கள் ஒரு இலட்சம் பணத்தைஅன்பளிப்பாகத் தந்துள்ளார். இப் பணத்தில் பிரதான வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தனது தாயாரான திருமதி.இராசலட்சுமி பத்மநாதன் அவர்களது நினைவாக இந்தச் சிலையை செய்து தருகிறார். இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபரான திரு.செ.பத்மநாதன் அவர்களின் பாரியாரும், புகழ் பெற்ற உயிரியல் ஆசிரியர் நாகநாதன் அவர்களது தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் (USA) அவர்கள் ரூபா ஒரு இலட்சம் பணத்தை அன்பளிப்பாகத் தந்துள்ளார். இந்நிதியைக் கொண்டு பாடசாலையின் பாலர் வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட இருக்கிறது. இது அவரது தகப்பனார் திரு.வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்பட இருக்கிறது. வை.கா.சி எனவும் A+ எனவும் அக்கால மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு.வை.கா.சிவப்பிரகாசம் எமது பாடசாலை பெற்றெடுத்த சிறந்த கல்விமான்களில் ஒருவராவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் M.A. பட்டதாரியான இவர் காட்லிக் கல்லூரி ஆரம்பத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினார். கொழும்பு சஹீராக் கல்லூரியிலும் கடைமையாற்றினார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியன் அதிபராகவும் கடமையாற்றிவராவார்
நிதியுதி அளித்த திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் USA மற்றும் பத்மநாதன் சோதிநாதன்(UK) ஆகியோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந் நிதியுதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஊக்கம் செலுத்திய எமது பழைய மாணவர் ஒன்றிய கண்டிப் பிரிவின் தலைவர் திரு.சி.வாசுதேவன் அவர்களுக்கும் கண்டி பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர் திரு.கந்தையா செல்வமோகன் அவர்களுக்கும் எமது நன்றிகள். அதேபோல நோர்வேயில் வாழும் திரு.இரத்தினசபாபதி கிருஸ்ணராசா அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இச் சிலைகளை தம்பசட்டியைச் சார்ந்த ஆச்சாரியார் வேலுப்பிள்ளை அவர்கள் செய்து தருவதற்கு இணங்கியுள்ளதாக அறிகிறோம்.