Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மணிக்கட்டு வலி’ Category

“கத்தியைப் பிடிச்சு மரக்கறிதன்னும் வெட்ட முடியுதே. இந்தக் கையாலை பெருந்தொல்லை” என்றவர் ஒரு பெண்மணி என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

கை என்று பொதுவாகச் சொன்னாலும் மணிக்கட்டைத்தான் குறிப்பிட்டார். அதுவும் ஒரு பக்கத்தில் மட்டுமே. இன்னும் தெளிவாகச் சொன்னால் மணிக்கட்டின் வெளிப்புறமாக கட்டை விரலும் மணிக்கட்டும் சந்திக்கும் இடத்தில்தான் வலி.

DeQuervainslabel-01(2)

நோயின் குணங்கள்

மணிக்கட்டின் வெளிப்புறத்தில் ஏற்படும் இந்த நோய்க்கு வாயில் நுழைய மறுக்கும் ஒரு பெயர் மருத்துவத்தில் உண்டு. ‘டி குயர்வெயினஸ் ரீனோ சைனொவைடிஸ்’ (De Quervain’s tenosynovitis)  என்பதாகும்.  இது மூட்டுகளில் ஏற்படும் மூட்டு நோயல்ல. அதாவது ஆர்திரைடிஸ் (Arthritis)  நோயல்ல.

மணிக்கட்டின் ஓரமாகச் ஒரு திசுப்படலத்தின் ஊடாச் சென்று பெருவிரலை அடையும் தசைநாணில் (tendon)  ஏற்படும் நோயாகும். பெருவிரலை ஆட்ட வளைக்க உதவுவது அந்தச் தசைநாண்தான். தசைநாணை சவ்வு என்றும் சொல்லலாம்.

இந் நோய் உள்ளவர்களுக்கு மணிக்கட்டை வளைக்கும் போதும், ஏதாவது பொருளை பற்றிப் பிடிக்கும்போதும், வலி அதிகமாகும்.

இந் நோய் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. ஆயினும் அந்தத் தசைநாண்களை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவதலாக இருக்கலாம்.

fea726b0a1185c8a41b3c4a006f87f0b

வலிதான் இந்நோயின் முதலாவதும் முக்கியமானதுமான அறிகுறியாகும். பெருவிரலின் அடிப்பகுதி முதல் மணிக்கட்டுவரை இந்த வலி நீடிக்கும். விரலை ஆட்டி வேலை செய்யும்போது வலி அதிகரிக்கும். அந்த இடத்தில் சற்று வீக்கமும் ஏற்படலாம்.

நாளாந்த வேலைகளின் போது பெருவிரலையும் மணிக்கட்டையும் பயன்படுத்தும் செயற்பாடுகளில் சிரமம் ஏற்படும். விரலை மடக்கும் போது திடீரென இறுகிப் பின்னர் விடுவதுபோன்ற உணர்வு சிலரில் ஏற்படுவதுண்டு.

வலியைத் தவிர பெருவிரல் மற்றும் சுட்டு விரலிகள் மரப்பது போன்ற உணர்வும் சிலரில் ஏற்படுவதுண்டு.

ஆரம்ப நிலையில் அக்கறைப்படுத்தாமல் விட்டால் வலியானது முன்புறமாகப் பெருவிரலுக்கும், பின்புறமாக முன்னங்கையிற்கும் பரவி வேதனை அதிகமாகும்.

எவ்வாறு ஏற்படுகிறது.

பெருவிரலை இயக்கும் இரு தசைநாண்கள் மணிக்கட்டுப் பகுதியில் ஒரு திசுப்படலத்தின் (fascia)  ஊடாகவே செல்கின்றன. அத் தசைநாண்களுக்கு வேலை அதிகரிக்கும்போது அவற்றில் அழற்சி ஏற்பட்டுத் தடிப்பு அடையும். இதுவே நோய்க்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

இருந்தபோதும் ரூமட்ரொயிட் ஆர்திரைடிஸ் போன்ற மூட்டு நோய்களின் போதும் ஏற்படலாம்.

மணிகட்டிற்கு அல்லது அத்தசைநார்களில் அடிபடுவதால் உட்காயங்கள் ஏற்பட்டு, அதன் விளைவாகவும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எவருக்கும் இந்நோய் ஏற்படலாம் என்றபோதும் 30 முதல் 50 வயதானவர்களிடையே அதிகம் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அத்தசை நாண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு வருவதற்கான சாத்தியம் அதிகம்.

எனவே, தோட்டத்தில் எதையாவது கிண்டுவது வெட்டுவது போன்ற வேலைகள், கொல்ப் டெனிஸ் போன்ற விளையாட்டுக்கள், குழந்தையைத் தூக்குவது போன்றவற்றைத் தொடர்ந்து செய்யும்போது இப் பிரச்சனை தோன்றலாம்.

பெண்களில் இது தோன்றுவது அதிகம். கர்ப்பமாக இருக்கும்போதும் ஏற்படுவதுண்டு. பொதுவாக நடுத்தர வயதினரிடையே எற்பட்ட போதும் பேரப் பிள்ளைகளைப் பராமரிக்கும் வேலை தலையில் வீழ்வதால் சற்று வயதான பெண்களிலும் இங்கு காணமுடிகிறது.

வலி வந்தால் என்ன செய்யலாம்.

உங்களுக்கு எந்தெந்த வேலைகள் செய்தால் வலி எடுக்கிறதோ அவற்றைச் செய்வதைத் தவிருங்கள்.

PJ-AY229_NEWMOM_NS_20101206155220

வலி உள்ள இடத்தில் ஐஸ் வைப்பது வலியையும் வீக்கத்தையும் தணிக்க உதவும்.

வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

மணிக்கட்டையும் பெருவிரலையும் ஆடாமல் வைத்து ஓய்வு கொடுப்பதற்கு பன்டேஸ் பண்ணுவது உதவும்.

41QWzK+CvIL._SY300_

இதற்கான splint,  brace  போன்றவை மருந்தகங்களில் கிடைக்கும். இவற்றை பகல் முழுவதும் அணிந்திருக்கலாம்.

TSpica_C7_1-resized-600

வலியைத் தணிப்பதற்கு சில பயிற்சிகள் உதவும். இவை பற்றி கட்டுரையின் இறுதியில் கூறுகிறேன்.

வலியுள்ள இடத்தில் மருத்துவர்கள் ஸ்டிரோயிட் (Steroid) ஊசி மருந்து போடுவதுண்டு. இதுவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

dm-image

மிக அரிதாக வலி மிகக் கடுமையாக இருந்தால் சத்திரசிகிச்சை செய்யப்படுவதுண்டு. தசைநாணை அழுத்திப் பிடிக்கும் திசுப்படலத்தை வெட்டி இளக்குவதன் மூலம் தசைநாண்களை இலகுவாக அசையவிடுவார்கள்.

De Quervain Tenosynovitis and Surgical Release

பயிற்சிகள்

பல்வேறு விதமான பயிற்சிகள் உள்ளன

xdequer_3

டெனிஸ் பந்தை அழுத்தல் பயிற்சி

வயியுள்ள கையில் ஒரு டெனிஸ் பந்தை பற்றிக் கொள்ளுங்கள். மெதுவாக பந்தின் மீது அழுத்துங்கள்.

15780256(300x300)

வலி ஏற்படவில்லை எனில் அழுத்தத்தை சற்று கூடுதலாகப் பிரயோகியுங்கள். சுமார் 5 செகண்டுகளுக்கு அழுத்தி வைத்திருந்துவிட்டு பின்னர் பிடியைத் தளர்த்துங்கள்.

இவ்வாறு 5 முதல் 10 தடவைகள் செய்யுங்கள். தினமும் 4-5 தடவைகள் இப் பயிற்சியைத் திரும்பச் செய்யுங்கள்

இப பயிற்சியைச் செய்வதற்கு முன்னரும் பின்னரும் அந்த இடத்திற்கு சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து மறு கையால் மெதுவாக அவ்விடத்தை நீவி மசாஜ் பண்ணுவது உதவும்.

முழங்கை மணிக்கட்டு EPL Stretch பயிற்சி

வலியுள்ள பக்கக் கையை முழங்கைப் பகுதியை மடிக்காது, நேராக நீட்டுங்கள். அதே நேரம் பெருவிரலை ஏனைய நான்கு விரல்களும் பொத்தியிருக்குமாறு மூடுங்கள்.

13133256(300x300)

இப்பொழுது உங்கள் மணிகட்டை சின்ன விரல் பக்கமாக படத்தில் காட்டியபடி மெதுவாக மடியுங்கள்.

அப்போது வலி ஏற்படுவதாக உணர்ந்தால் மேலும் மடிப்பதைத் தொடராது நிறுத்துங்கள். 5 செகண்டுகளுக்கு அந்தளவில் வைத்திருங்கள். வலி அதிகரிக்கவில்லை எனில் 5 முதல் 10 தடவைகள் இதே பயிற்சியைத் தொடருங்கள்

மணிக்கட்டுப் பயிற்சி

வலியுள்ள பக்கத்தின் முழங்கையை நேராக நீட்டுங்கள். அக் கையின் பிற்புறத்தை மற்றக் கையால் பற்றி அது மணிக்கட்டுப் பகுதியில் முன்புறமாக வளையுமாறு சற்று அழுத்தம் கொடுங்கள். 10 முதல் 30 செகண்டுகளுக்கு அவ்வாறே பிடித்திருங்கள்.

wrist stretch

அடுத்து நோயுள்ள கையின் பெருவிரல் தவிர்ந்த ஏனைய நான்கு விரல்களையும் மற்றக் கையால் உட்புறமிருந்து வெளிப்புறமாகத் தள்ளுங்கள். 10 முதல் 30 செகண்டுகளுக்கு அவ்வாறே பிடித்திருங்கள். மூன்று தடவைகள் இவற்றை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.

கைலாகுப் பயிற்சி

கைலாகு கொடுக்கும்போது உங்களது மணிக்கட்டு, முன்னங்கை, மற்றும் விரல்கள் ஆகியவற்றின் தசைநார்கள் இறுக்கமின்றி தளர்கின்றன. இது இந்நோய்க்கு நல்ல பயிற்சியாகும். ஆனால் அதற்காக மற்றவர்களின் கைகளை பயற்சிக்காக எதிர்பார்க்க முடியாது.

எனவே உங்களது நோயுள்ள கையால் மற்றக் கையைப் பற்றிப் பயிற்சி செய்யுங்கள். கைகளை இறுக்கமாகப் பற்றாமல் தளர்ச்சியாகப் பற்றிக் கொண்டு கைலாகு கொடுப்பது போல மேல் கீழாக சற்று ஆட்டுங்கள். அதேபோல பக்கவாட்டிலும் சில தடவை ஆட்டுங்கள். இது 30 செகண்டுகள் வரை தொடரலாம்.

மேலும் இரண்டு தடவைகள் செய்யுங்கள்.

இறுதியாக

ஓய்வு மற்றும் பயிற்சிகளின் பயனாக அப் பெண்ணின் மணிக்கட்டு வலி தணிந்து விட்டது. மீண்டும் அத் தசைநார்களுக்கு அதீத வேலை கொடுக்காது கவனம் எடுப்பதாகச் சொல்லியிருப்பதால் மீண்டும் வலி வராது என நம்பலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

 

 

Read Full Post »