Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வலி(கவிதை)’ Category

>நோவுகள்!
அதுதான் வலிகள்
எம்மை
விட்டுப்பிரியா துணைகள்.

எத்துணை துன்பமானவை.
வகை வகையாக மனித உடலில்
தஞ்சமடைகின்றன.
வளர்கின்றன
குட்டி போட்டு
பட்டியாகப் பெருகுகின்றன.
உடலில் மட்டுமா
உள்ளத்திலும் கூடவே.

ஆர்திரைடிஸ், ஆர்திரல்ஜியா,மூட்டுவாதம்,
தசைப்பிடிப்பு, Facitis, Myalgia
தலைவலி, கபாலகுத்து
எனப் பெயரிட்டு அடங்காது.
சொல்லி மாளது.
இத்துடன் மனவலிகளும்
இணைந்து கோரத் தாண்டவம் ஆடுகின்றன.

நிவாரணம் உண்டா இவைகளுக்கு!

வலிநிவாரணிகளா
மன அழுத்த நிவாரணிகளா
பிடிப்பு தணிக்கும் மருந்துகளா
ஒத்தடமா
மஸாஜா
Infra Red லைட்டா?

இவை எல்லாம்
என்ன செய்ய முடியும்
இதமான வார்ததைகளுக்கு முன்னால்!

ஆறுதல் வார்த்தைகளுக்கு செலவில்லை,
பணம் தேவையில்லை
உடலுழைப்பும் வேண்டியதில்லை.
ஆனால்
மரணத்தில் வாசலில் நிற்பவனுக்கும் கூட
அமைதியைக் கொடுக்கும்.
அதுவும்
செவிலிப் பெண்களிடமிருந்து
ஊற்றெடுத்தால்.

கீழே
எஸ்.செந்தில்குமார் கவிதை
தீராநதி ஜீலை 2008 இதழில்
சுவைத்தேன்.
உங்களுக்கும் பிடிக்கக் கூடும்

நோவுக்கு பெயர் தரும் செவிலிப் பெண்கள

மூர்க்கம் குறைந்த விலங்கின்
இருப்புப் போல நோவு நிறைந்த வீடு இருக்கிறது
அறைகள் நோவுகளால் கட்டப்பட்டிருக்கிறதை
அதன் கதவுகள் கூட அறிந்திருக்கின்றன.
நோவுகள் எங்கிருந்து வந்து சேர்கின்றன
பிறகு எங்கே கலைந்து செல்கின்றதென
அறியப்படாத புதிராக உள்ளது
நோவு நிறைந்த மனிதன் வாதைகளைச்
சொல்லி
அழுது கிடக்கிறான்.
அவன் நோவுகளை அறியும் சுவர்கள்
வாதைகளின் அவஸ்தையில் விரிசலுறுகின்றன.

நிவாரணமற்ற நோவுகளுக்கு
பெயர் வைத்திருக்கும்
செவிலிப் பெண்கள்
வண்ண உடையில்
மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள்.

செவிலிப் பெண்கள் தங்கள்
சீருடை அணிந்து கொள்ளும் போது
தற்காலிகமாக நோவுகள்
அவர்களது
வெள்ளைநிற சீருடையில்
ஒளிந்து கொள்ளத் தயாராகின்றன.

நன்றி:- தீராநதி ஜீலை 2008

Read Full Post »