>
தமிழ்பிரியாவின் ‘காம்பு ஒடிந்த மலர்’ வெளியீட்டு விழா
இன்று 13.12.2009 ஞாயிறு வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிலைய கேட்போர் கூடத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகியது.
மீரா பதிப்பகம் சார்பில் புலோலியோர் இரத்தினவேலோன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
டொக்டர்.எம்.கே.முருகதனந்தன் தலைமை வகித்தார்.
வெளியீட்டு உரையை மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்தினார்.
அதற்கு முன்னர் தெளிவத்தை 75 அகவையை எட்டியதை ஒட்டி மீரா பதிப்பகம் சார்பில் ஞானம் பத்திரிகை ஆசிரியர் ஞானசேகரன் அவருக்கு நினைவுப் பரிசில் வழங்கிக் கெளரவித்தார்.
வெளியீட்டு உரையைத் தொடர்ந்து நூல் வெளியீடு நடைபெற்றது.
முதற் பிரதியை தமிழ்பிரியாவின் உறவினரான திரு.எஸ்.வேல்முருகு பெற்றுக்கொண்டார்
தொடர்ந்து பவானி சிவகுமாரன் நூல் நயவுரை நிகழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து ராணி சீதரன் நூல் நயவுரை நிகழ்த்தினார்.
இறுதியாக திரு கந்தசாமி நன்றியுரை நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவுற்றது.