Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘நூல் வெளியீடு’

இரு ரவீந்திரன்களின் நூல்களின் அறிமுகம் மற்றும் ஆய்வரங்கங்கள் எதிர் வரும் ஞாயிறுகளில் நடைபெற இருக்கின்றன.

வதிரி.சி.ரவீந்திரன் மற்றும் ந.இரவீந்திரன் ஆகியோரது நூல்கள் தொடர்பான நிகழ்வுகளே அவை.

வதிரி.சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ 

வதிரி.சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியின் அறிமுக விழா எதிர்வரும் 21.08.02011 ஞாயிறு மாலை 4.15 மணிக்கு நடைபெற உள்ளது.

கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

தலைமை:- பேராசிரியர் மா.கருணாநிதி (கொழும்பு பல்கலைக் கழகம் கல்வியியல் துறை)

முதற்பிரதி பெறுநர்:- புரவலர் ஹாசிம் உமர்

தமிழ்தாய் வாழ்த்து

வரவேற்புரை :-
திரு.செ.கணேசன்

நூல் அறிமுகம்:-
திருமதி M.S.தேவகெளரி (சிரேஷ்ட விரிவுரையாளர் ஊடகவியல் கல்லூரி)

வாழ்த்துரைகள் :-

பேராசிரியர் சபா.ஜெயராஜா
திரு டொமினிக் ஜீவா(மல்லிகை)
தி.ஞானசேகரன்(ஞானம்)

கருத்துரை:-

பேராசிரியர் செ.யோகராசா (கிழக்கு பல்கலைக் கழகம் தமிழ்துறை)

நயவுரை:- மத்திய கிழக்கு நாட்டிலிருந்து சிறிஸ்கந்தராஜா

ஏற்புரை:- நூலாசிரியர்

தொகுப்புரை:- மேமன்கவி

0.0.0.0.0.0.0
ந.இரவீந்திரனின் ‘முற்போக்கு இலக்கிய எழுச்சி’
ந.இரவீந்திரனின் ‘முற்போக்கு இலக்கிய எழுச்சி’ நூல் ஆய்வரங்கும் கலந்துரையாடலும் எதிர்வரும் 28.08.02011 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நான்கு முன்னொடி முற்போக்கு எழுத்தாளர்களான
என்.கே.ரகுநாதன்
கே.டானியல்
டொமினிக் ஜீவா
நீர்வை பொன்னையன்
ஆகியோர் படைப்புகள் பற்றி
இடம்:-
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம் (WERC)
58,தர்மாரா வீதி
கொழும்பு 0.6
தலைமை:- கலாநிதி.செல்வி திருச்சந்திரன்
ஆய்வாளர்கள்

திக்குவல்லை கமால்- என்.கே.ரகுநாதன்
லெனின் மதிவாணம்- கே.டானியல்
எம்.தேவகெளரி-  டொமினிக் ஜீவா
வ.மகேஸ்வரன்-  நீர்வை பொன்னையன்

கலந்துரையாடல் நடைபெறும்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

மு.பொ அவர்கள் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நவீனம், விமர்சனம், எனப் பல துறைகளிலும் தனது திறமைகளைக் காட்டியவர். இதழ் ஆசிரியரும் கூட. சுயசிந்தனை அவரது பெரு முதல்.

இலங்கையில் தமிழ் இலக்கியத் துறை முற்போக்கு நற்போக்கு பிரிந்து நின்று வரிந்து கட்டி முரண்பட்டு நின்ற போது, இலக்கியச் சிந்தனை மரபில் இற்றைவரை இல்லாத புது வீச்சைப் பாச்சிய மு.தளையசிங்கத்தின் மரபில் வந்தவர் மு.பொ. கருத்து முதல்வாதம் பொருள் முதல் வாதம் என இரு முனைப்பட்ட சிந்தனை நிலவியபோது ஆத்மார்த்தம் சார்ந்த புதிய சிந்தனை ஊற்றை பிரவாகிக்க விட்டவர் மு.த. மெய்யுள் என்ற அவரது எண்ணக்கரு இலங்கையை விட தமிழகத்தில் கூடிய வரவேற்பைப் பெற்றது.

மு.பொ படைப்புகளிலும் விமர்சனங்களிலும் இந்தக் கருத்து உள்ளுறைந்து நிற்பதை தீவிர வாசகர்கள் அறிவர்.

‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்பது மு.பொன்னம்பலம் அவர்களின் புதிய நூலாகும். அவர் பல வருடங்களாக எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்துள்ளது.

400 பக்கங்களுக்கு மேல் வரும் இந்த நாலில் உள்ள படைப்புகள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  •  அறிமுக விமர்சனம்
  • விமர்சனம்
  • ஆய்வு நிலை சார்ந்த விமர்சனம்
  • எதிர்வினை விமர்சனம்

இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 14.08.2011 ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

மாலை 4.45 மணிக்கு பேராசிரியர்.சோ.சந்திரசேகரன் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகும்.

தலைமையுரை, வரவேற்புரையைத் தொடர்ந்து புரவலர் ஹாசிம் உமர் சிறப்புப் பிரதியைப் பெறுவார்.

நூல் பற்றிய உரைகள்

திரு.குணரத்தினம் செந்தீபன்.

வைத்திய கலாநிதி. எம்.கே.முருகானந்தன்

திரு.க.சண்முகலிங்கம் (ஆசிரியர்- பிரவாதம்)

ஏற்புரையை நூலாசிரியர் மு.பொன்னம்பலம் வழங்குவார்

நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெறும்.

நண்பர்கள் வட்டம் ஒழுங்கு செய்துள்ள இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறார்கள்.

இன்றைய தமிழ் இலக்கியத்தின் புதிய சிந்தனைப் பாய்சல்களை அவாவும் நண்பர்களுக்கு இக் கூட்டம் அாருவிருந்தாக அமையும் என நம்புகிறேன்.

 0.0.0.0.0.0.0

Read Full Post »