Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2013

அவசர கருத்தடைகளின் பாவனை அமெரிக்காவில் இருமடங்காக அதிகரித்திருக்கிறது என அந்நாட்டு சுகாதார புள்ளிவிபரங்கள் தெரிவிக்கினறன.
அவசர கருத்தடை

அவசர கருத்தடை

Use of Emergency Contraception Doubled Since 2002 in U.S.அவசரகாலச் சட்டம் பலதசாப்தங்கள் நீடிப்பது பற்றிய சுரணையே இல்லாத எங்கள் நாட்டில் அவசர கருத்தடை பற்றிய அக்கறையும் கிடையாததால்தான் தினமும் பலநூறு சட்டவிரோத கருக்கலைப்புகளும் பல மரணங்களும் நடந்து கொண்டேயிருக்கின்றன.

கருக்கலைப்பு சட்டவிரோதமானதாக இருக்கும் ஒரு சில நாடுகளில் இலங்கையும் அடங்கும். புனித நாடு என்ற முகமூடியை அணிந்து கொண்டு, கொல்லைப்புறத்தில் பல உயிர்கள் சட்டவிரோத கருக்கலைப்புகளால் தினமும் காவு கொள்ளப்படுகின்றன.

“The proportion of women in the U.S. who have ever used emergency contraception rose from 4% in 2002 to 11% by 2010, according to CDC data.

The reasons for emergency contraception use were about equally split between having had unprotected sex and fearing that their contraceptive method would not work. Most women who have ever used emergency contraception have done so once (59%) or twice (24%).

National Center for Health Statistics brief”

ஏன் எமது மக்களுக்கு எதிலும் இவ்வளவு அக்கறையீனமோ தெரியாது? குடாநாட்டிலும் பல கருக்கலைப்புகளும் தற்கொலைகளும் வேண்டாத கர்ப்பங்களால் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அவசரகால கருத்தடை Emergency Contraception பற்றி சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய கட்டுரை.

அவசர கருத்தடை

Use of Emergency Contraception Doubled Since 2002 in U.S.
EMERGENCY-CONTRACEPTION-2

Read Full Post »

பட்டிப் பூ
‘உதவாக்கரை.
உதையேன் வளர்க்கிறாய்
உள் வீட்டில்.’

புறுபுறுத் தாங்கவில்லை!

“அப்பாவி போல வெள்ளை நிறம்
அதெல்லாம் வெளிவேசம்.
உள்ளெல்லாம் பெரு நஞ்சு.
குடல் பிரட்டும்
பெரு நாத்தம்
புடுங்யெறி”
பொக்கையால்
எச்சில் பறக்கப்
பொரிகின்றாள்.

கேட்க மனம் பதறுகிறது
இதன் பெருமை தெரியாது அவளுக்கு.
பயனுள்ள சிறு செடி
மறைந்திருந்து உயிர் காவும்
பெருநோயாம் குருதிப் புற்றுக்கு
இதன் சாற்றில் பொடித்தெடுத்த
வின்கிரிஸ்டின் அருமருந்தாம்
வெளிநாட்டார் கண்டறிந்தார்.
நீரிழிவுக்கு சொன்ன மருந்தென
எம்மூர்ப் பரியாரியும்
பகருகிறார்.

பட்டிப்பூ

குறுஞ்செடியாய் பரந்திருந்து
பால்நிறமும் ஊதாவுமாக
மலர் சொரிந்தது
என் வீட்டு முற்றத்தில்.
சிறுவயதில் அளைந்ததில்
என்னுடலும் உரமாயிற்று
நோய்நெடி அணுகாது.

பீநாறி, சுடுகாட்டு மல்லியென
இழித்தாலும்
நித்திய கல்யாணியென
மங்களமாயும் விழிப்பர்;
மலையாளச் சோதரர்கள்.

பட்டப்பூ

என்னளவில் என்றென்றும்
பட்டிப்பூ
அழித்தொழிக்கவொண்ணாது.
பட்டி தொட்டியெங்கும்
பரப்ப வேண்டிய
சிறப்பான மூலிகைதான்.

எம்.கே.முருகானந்தன்

வீரகேசரி ஞாயிறு இதழிலும் எனது ‘மறந்து போகாத சில’ புளக்கிலும் வெளிவந்த கவிதை.

0.0.0.0.0.0.

Read Full Post »

முன்நாட்களில் பாடசாலைகளில் கரும்பலகை உபயோகிக்கப்பட்டது.
எழுதுவதற்கும் கீறுவதற்குமான வெளியாக அதுவே வகுப்பறையில் ஆசிரியருக்குப் பயன்பட்டது.

SDC14096-001
பல தசாப்தங்களுக்கு முன்னர் அவை ஸ்லேட்டினால் செய்யப்பட்டன.
ஸ்லேட் பொதுவாக நிறம் கருப்பு இருந்ததால் கரும்பலகை என்ற பெயர் வந்தது. பின்னர் பலகையில் செய்து கறுப்பு வரண்ம் பூசினர்.
சுண்ணக்கட்டியால் கரும்பலகைகளில் எழுதினார்கள்.
பருத்தி துணியிலான அழிப்பான்களால் (டஸ்டரால்) சுத்தம் செய்யப்பட்டன.
சுண்ணக்கட்டியின் தூசியால் ஒவ்வாமை ஏற்படுகிறது.
இப்போது கரும்பலகைக்குப் பதிலாக வெள்ளை போர்டு வந்துவிட்டது.
மார்க்கர் கொண்டு எழுதுகின்றனர்.

Read Full Post »

புகைத்தலா HIV யா? எயிட்ஸ்  நோயாளிகள் உயிரை விரைவில் பறிக்கும்?

smoking

இது பற்றிய ஆய்வு அண்மையில் நடைபெற்றது. அத பற்றிய தகவல் Journal Watch மருத்துவப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அவர்களைப் பொறுத்த வரையில் புகைத்தலானது அவர்களது வாழ்நாளில் பெருமளவை HIV விட அதிகம் பறிக்கும் எனத் தெரிகிறது.

இது எங்களுக்கான விடயம் அல்ல என எண்ணாதீர்கள்.

எயிட்ஸ் இல்லாத சாதாரண மனிதர்களிலும் புகைப்பவர்களின் வாழ்வானது புகைக்காதவர்களை விட 10 முதல் 17 வருடங்கள் வரை குறைவு என்பதை முன்னைய ஆய்வுகள் எடுத்துக் கூறியிருக்கின்றன.

மற்றொரு ஆய்வின் பிரகாரம் 30 வயதுள்ள புகைப்பவர் மேலும் 35 வருடங்கள் வாழக் கூடும். அதே நேரம் 30 வயதுள்ள புகைக்காதவர் மேலும் 53 வருடங்கள் வாழ முடியும் என்கிறது.

தீர்மானம் உங்கள் கையில்..

HIV-infected smokers lose more life-years to smoking than to HIV, according to a study in Clinical Infectious Diseases.

In an HIV-infected cohort, analyses adjusted for HIV-related and other clinical variables revealed that all-cause mortality was more than fourfold higher, and non–AIDS-related mortality was more than fivefold higher, among current smokers than among never smokers. Some 12.3 life-years were lost from smoking, compared with 5.1 life-years lost from HIV infection.

For HIV-Infected Patients, Smoking Is Deadlier Than HIV

Read Full Post »