Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பரிசளிப்பு விழா’ Category

>மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தின் பரசிளிப்பு விழா அண்மையில் நடைபெற்றதை அறிவீர்கள்.

விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில.

பரிசளிப்பு மேசையில் நூல்களும் கேடயங்களும்.

பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதனும், திருமதி ரம்யா இரகுநாதனும் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்படுகின்றனர்.

வாயிலிலிருந்து அழைத்துச் செல்லப்படுகையில்..

மாணவர்களிடையே பிரதம விருந்தினரும் பாரியாரும்

பிரதான மண்டபத்தினுள் ….

மேடையில் பரிசளிப்பு கேடயங்களுக்கு அருகில் ….

குத்து விளக்கு ஏற்றுகிறார் பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன்.

இன்னும் பல புகைப்படங்கள் மற்றொரு பதிவில்.

Read Full Post »

>

எமது பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா எதிர் வரும் 23.10.2010 சனிக்கிழமை அன்று டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் நடைபெற இருக்கிறது.

பரிசில்களை திருமதி ரம்யா இரகுநாதன் அவர்கள் பரிசில்களை வழங்குவார்.

பரிசு பெறும் மாணவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

Read Full Post »

>

2010ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்தோருக்கு பரிசில்கள் வழங்க நிதி உதவி வழங்கியோர்.

எமது பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயதிலிருந்து மேற்படி புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்தோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் வருடாவருடம் இளஞானச் சுடர் விருதினையும், பணப் பரிசிலையும் வழங்கி வருவதை அறிவீர்கள்.

இவ் வருடம் 16 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளனர் என்பதை ஏற்கனவே அறியத் தந்தோம்.

அவர்களுக்கு எதிர் வரும் 22ம் திகதி போயா தினத்தில் நடைபெற இருக்கும் வருடாந்த பரிசளிப்பு விழாவின் போது பரிசில்கள் வழங்கப்படும். அதற்கான நிதியுதவி வழங்கியோர் விபரம் பின் வருமாறு

  1. திருமதி.கலா.சுந்தரலிங்கம் (கனடா)-  வியாபாரிமூலை அமரர்கள், பிரபல வர்த்தகர் திரு.நா.ம.பரம்சோதி, திருமதி.இராசரத்தினம் பரம்சோதி அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது இளைய மகள் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  2. திரு.இராசலிங்கம் சுந்தரலிங்கம் (கனடா)-  அமரர்கள் திரு.சு.இராசலிங்கம், திருமதி சேதுப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது மகன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  3. திரு.இராசநாதன் சுவாமிநாதன் – ரூபா 4000.00 (இருவருக்கு)
  4. திரு.முருகுப்பிள்ளை சோமசுந்தரம் – ரூபா 4000.00 (இருவருக்கு)
  5. திருமதி.கெங்கா இராமச்சந்திரன் – வியாபாரிமூலை வள்ளிவளவு அமரர்கள் பிரபல வர்த்தகர் பலாங்கொடை திரு.நடராசா, திருமதி அன்னபூரணி நடராசா ஞாபகார்த்தமாக அவர்களின் மகள் – ரூபா 4000.00 (இருவருக்கு)
  6. திரு.சிதம்பரம் வர்ணகுலசிங்கம்; – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  7. திரு.கதிர்காமத்தம்பி கலாகரன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  8. திரு.கதிர்காமத்தம்பி பிரபாகரன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  9. திரு.ஆறுமுகநாதன்.சிவநாதன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  10. திரு.கந்தயினார் முருகவேள் (அவுஸ்திரேலியா)- ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  11. திரு.கந்தயினார் பாலதாஸ் (கண்டி) – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
  12. திரு.சிதம்பரப்பிள்ளை வாசுதேவன்  (கண்டி) – ரூபா 2000.00 (ஒருவருக்கு)

இவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி பரிசுப் பணத்தை வருடாந்தம் வழங்குவதற்கு இணங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விசேட பரிசுகள்

இவற்றைத் தவிர கீழ்கண்டவர்களால் வங்கியில் இடப்பட்ட வைப்புப் பணத்தின் வட்டிப் பணத்திலிருந்தும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

  1. டொக்டர்.M.K.இரகுநாதன் அவர்களால், அதிக புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் வருபவருக்கு திரு திருமதி கனகசபாபதி வருடாந்த நினைவுப் பரிசிற்காக வைப்பிலிட்ட ரூபா 100,000.00 லிருந்து கிடைக்கும் வருடாந்த வட்டிப் பணம் பரிசாக வழங்கப்படும்.
  2. டொக்டர்.S.N.செல்வச்சந்திரன் அவர்களால், புள்ளிகள் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களில் வருவோருக்கு இவ்வருடப் பரிசாக டொக்டர்.செல்வச்சந்திரனின் வருடாந்த புலமைப் பரிசில் வழங்கிய ரூபா 15,000.00 முறையே 50%, 30%, 20% என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்படும். அடுத்த வருடத்திலிருந்து அவர் வைப்பிலிட்ட ரூபா 200,000.00 லிருந்து கிடைக்கும் வருடாந்த வட்டிப் பணம் முதல் மூவருக்கும் அதே விகிதத்தில் பரிசாக வழங்கப்படும்.
  3. திரு.கேதீஸ்வரன் அவர்களால் அதிக புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் வருபவருக்கு அமரர் முன்னாள் அதிபர் ந.சிவபாதசுந்தரம் நினைவாக வைப்பிலிடப்பட்ட 15,000.00 (பதினையாயிரம்) ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணம் பரிசாக வழங்கப்படும்.

Read Full Post »

>பல பழைய மாணவர்கள் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமது நினைவுக்கு உரியவர்கள் ஞாபகமாக வருடாந்தம் நினைவுப் பரிசில்களை வழங்குவதற்கான நிதியை கொடுத்துள்ளார்கள்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அவற்றை வங்கி வைப்புப் பணமாக இட்டு அதன் வட்டிப் பணத்தில் பரிசுகளை வழங்கவுள்ளது.
நினைவுப் பரிசில் விபரங்கள்

1. சகல துறையிலும் சிறந்து விளங்குபவருக்கான பரிசு – அமரர் செல்லாச்சி ராஜரத்தினம் நினைவாக வழங்கியவர் திரு ராஜ் சுப்பிரமணியம் – ரூபா 15,000.00 (பதினையாயிரம்).
2. புலமை பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவருக்கான பரிசு – அமரர் முன்னாள் அதிபர் ந.சிவபாதசுந்தரம் நினைவாக வழங்கியவர் திரு.கேதீஸ்வரன் – ரூபா 15,000.00 (பதினையாயிரம்).
3. ஆங்கில மொழித் திறனுக்கான பரிசு – அமரர் மு.காசிவிசுவநாதன் நினைவாக வழங்கியவர் திருமதி தேவாம்பிகை காசிவிசுவநாதன் – ரூபா 15,000.00 (பதினையாயிரம்).
4. திருக்குறள் மனனத்தில் சிறந்து விளங்குபவருக்கான பரிசு – அமரர் முன்னாள் அதிபர் மூத்தபிள்ளை பொன்னையா நினைவாக வழங்கியவர் திருமதி வேல் நந்தகுமார் – ரூபா 15,000.00 (பதினையாயிரம்).
5. வரவொழுங்கிற்கான பரிசு – அமரர் பரமேஸ்வரி கதிரவேற்பிள்ளை நினைவாக வழங்கியவர் திரு.கதிரவேற்பிள்ளை மகேஸ்வரன் – ரூபா 15,000.00 (பதினையாயிரம்).
6. பொது அறிவில் சிறந்து விளங்குபவருக்கான பரிசு – அமரர் டொக்டர்.க.பரமகுருநாதன் நினைவாக வழங்கியவர் திருமதி பரமகுருநாதன் தங்கம்மா – ரூபா 15,000.00 (பதினையாயிரம்).
7. சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசு – அமரர் டொக்டர்.க.திருநாவுக்கரசு நினைவாக வழங்கியவர் திருமதி கௌரிமனோகரி மகேஸ்வரன் – ரூபா 15,000.00 (பதினையாயிரம்).
8. ஆக்கத் திறனுக்கான பரிசு – அமரர் சுவாமிநாதன் மனோன்மணி நினைவாக வழங்கியவர் திரு.சுவாமிநாதன் சிவபாலன் – ரூபா 20,000.00 (இருபதினாயிரம்).
9. பண்பு விருத்திக்கான பரிசு – அமரர் வ.துரைசாமிப்பிள்ளை நினைவாக வழங்கியவர்கள் திருமதி.க.பரமேஸ்வரன், திரு.து.ராஜசேகரம் – ரூபா 20,000.00 (இருபதினாயிரம்).
10. சிறந்த நூலகப் பயன்பாட்டிற்கான பரிசு – அமரர்கள் திரு,திருமதி.சிதம்பரம் நினைவாக வழங்கியவர் திரு.சிதம்பரம் வர்ணகுலசிங்கம்; – ரூபா 15,000.00 (பதினையாயிரம்).
11. புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவருக்கான பரிசு – அமரர்கள் திரு,திருமதி.கனகசபாபதி நினைவாக வழங்கியவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் – ரூபா 100,000.00 (ஒரு இலட்சம்;).
12. நல்லாசிரியருக்கான பரிசு – அமரர் திருமதி.சின்னத்தங்கம் சுப்பிரமணியம் நினைவாக வழங்கியவர் திரு சுப்பிரமணியம் குணராஜா.

நினைவுப் பரிசுகளுக்கான நிதி உதவிகளைச் செய்த அனைவருக்கும் பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலையில் நடை பெற இருக்கும் வருடாந்த பரிசளிப்பு விழாவின் போது மேற்படி பரிசுகள் வழங்கப்படும்.

Read Full Post »